வாழ்க்கையில் சில விஷயங்களை காண புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அதில் நான் மிக முக்கியமாக கருதுவது, நமது பெற்றோரின் திருமணத்தை நாம் பார்ப்பது. பல பேருக்கு அதை பார்க்கும் தருணம் கிடைக்காமல் போய்விடும். ஒவ்வொரு தடைக்கும் பல காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. முடிவு என்று பார்த்தல், திருமணத்தை பார்க்காமல் போய் விடுவது தான். ஆனால் நானும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, அந்த தருணத்தை கைவிட விரும்பவில்லை.
இன்று எனது பெற்றோரின் ஆறுபதாம் திருமணம். எனது வம்சத்தின் பூர்விகம் மதுரை என்பதாலும், அனைத்து சொந்தங்கள் அங்கே இருப்பதாலும், அங்கு வைத்தால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்த நான், அம்மாவின் விருப்பபடி திருக்கடையூரில் ஏற்பாடு செய்து விட்டேன். திருக்கடையூர் பற்றி அறிய இந்த சொடுக்கவும்.
இன்று எனது பெற்றோருக்கு ஆறுபதாம் திருகல்யாணம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகின்றேன். உங்களுடைய ஆசிர்வாதங்களும் அவர்களுக்கு கிடைக்கட்டும்.
No comments:
Post a Comment