Thursday, March 29, 2012

கலவைகள் - மார்ச் 2012


கடந்த சில மாதங்களாகவே வாழ்க்கையில் சுவாரஸ்யங்கள் இல்லாமலும், எந்தவித உப்பு மற்றும் இனிப்பு செய்தி இல்லாமலும், எங்கும் செல்லாத காரணத்தாலும், பதிவு உலகில் வருவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நண்பர்களின் சுப காரியங்கள் கூட ஏதும் நடக்கவில்லை. இருந்தாலும், வாரத்தில் பத்து முதல் பதினைந்து பேர் வரை எந்தன் வலை தளத்தை பார்க்கிறர்கள் என்றால் என்னால் கூட நம்ம முடியவில்லை. வலை தளத்தை பார்த்த அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பதிவு போட கூடிய விஷயங்கள் சில நடக்க இருப்பதால் தான் இந்த முன்னுரை.

சென்னைக்கு வந்த பிறகு, நான் செல்ல நினைத்த இடங்களில் முதலில் இருந்தது அதிகாலையில் கடற்கரையில் நடப்பது. இரண்டு வாரத்திற்கு முன்பு தான் அந்த எண்ணம் அரைகுறையாக நிறைவேறியது. ஆம் நானும் நண்பர் ஒருவரும் அதிகாலை செல்ல திட்டமிட்ட இந்த நடை, அதிகாலை தூக்கத்தினால், ஒரு மணிநேரம் தடையானது. அதனால் இளம் வெயிலில் நடக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.  அதிகாலையில் கடற்கரையில் நடப்பது ஒரு சுகம் தான். அந்த சுகத்தை மீண்டும் ஒரு வாரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகின்றேன்.

இன்னொரு இடம் எக்ஸ்பிரஸ் அவன்யு. அங்கு சென்ற பிறகு தான் இனி மேல் அந்த இடத்திக்கு செல்ல கூடாது என்ற முடிவு எடுக்க முடிந்தது. ஆம் இரண்டு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரம் நிறுத்த ரூ. 20 கட்ட வேண்டி உள்ளது. ஒரு திரைப்படம் பார்க்க போனாலே, குறைந்தது ரூ. 60 கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். செலவு எவ்வாறு செய்வது என்று தெரியாமல் இருக்கும் மக்கள் மட்டுமே, அங்கு செல்ல முடியும் என்பது என் எண்ணம் ஆகி விட்டது. அதே போல் தாம்பரத்தில் இருந்து அங்கு சென்று படம் பார்க்கும் நிலைமை இல்லை. அதனால் இனிமேல் எக்ஸ்பிரஸ் அவன்யுக்கு என் வாழ்வில் இடம் இல்லை.


 சமீபத்தில் ரசித்தது/படித்தது

உன்னை யாரும் காதலிகவில்லை
என்று கவலைபடாதே அது
உன் வருங்கால மனைவியன்
வேண்டுதலாக கூட இருக்கலாம்.

மதுரையில் இருக்கும் மில்லேனியும் மால் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. மதுரையில் இருக்கும் வடபழனி ராகத் பிலாசா என்று கூறலாம். மதுரை மக்களுக்கு இந்த மால் நிச்சயமாக ஒரு புது அனுபவம் தான். நான் சென்று பார்க்கும் போது கூட, வடநாட்டில் இருந்து மதுரையில் இருக்கும் மக்கள் தான், பொருட்களை வாங்கி செல்கிறார்கள் என்ற நிலைமையை பார்க்க முடிந்தது. கண்டிப்பாக மதுரை மக்கள் அனைவரும் ஒரு முறை சென்று பார்க்க வேண்டிய விஷயம்.

சொல்லப்பட வேண்டிய முக்கிய விஷயம், iPhoneனை பற்றியது. நான் வைத்து இருக்கும் இந்த கை தொலைபேசி, அமெரிக்காவில் ஒரு ஒப்பந்தம் போட்டு வாங்கியது. அதனால் இந்தியாவில் பயன்படுத்த முடியாத சூழ்நிலை. நண்பர் ஒருவர் இந்த iPhone விஷயத்தில் புலி போல் இருந்தாலும், எனக்கு வந்த பிரச்சனையை அவரால் சரி செய்ய முடியவில்லை. அவரும் தன்னால் முடிந்த வரையில் உதவி செய்து பார்த்தார். ஆனால் முடிவு கிடைக்கவில்லை. சென்னையில் iPhone வைத்து இருக்கும் நண்பர் இடம் கேட்கும் போது அவரும் இதே போல, பிரச்சனைகளை சந்தித்ததாகவும், ஒரு கடைக்கு சென்ற போது அவர்கள் சரி செய்து விட்டதாகவும் கூற, நானும் அதே கடைக்கு சென்றேன். என் தொலைபேசியை பார்த்த பின்னர், ரூ. 500 செலவு ஆகும் என்றும் கூற, நான் சம்மதித்தேன். ஒரு மணி நேரத்தில் என்னுடைய கைதொலைபேசி சரி செய்து கொடுக்க பட்டது. ஆச்சிரியமான விஷயம் தான். இதே போல், வலை தளத்தில் பார்த்து எனக்கு உதவி செய்த நண்பருக்கும், இரண்டு வாரத்தில் அவருடைய தொலைபேசியில் பிரச்சனை ஏற்பட்டது. அவரும் நான் சென்ற கடைக்கே சென்று பிரச்சனையை கூறினார். அவருடையதும் 30 நிமிடத்தில் சரி செய்ய பட்டது. இந்த பிரச்சனையை பற்றி வலை தளத்தில் இரண்டு வாரங்களாக தேடியும் கிடைக்காத தீர்வு, சென்னையில் உள்ள ஒரு சாதாரண கடையில் கிடைக்கிறது. நண்பர் அந்த கடை நபரிடம் எங்கு இதை பற்றி பழகுகிர்கள் என்ற கேட்டதற்கு, இதற்காகவே தனியாக பயிற்சி அளிக்க படுகிறதாம். நான் iPhone வைத்து பார்த்த வரை, உலக அளவில் பல தீராத பிரச்சனைக்கு, எளிய முறையில் இங்கு தீர்வு கிடைக்கிறது. கடை விவரங்களை பற்றி அறிய என்னை தொடர்பு கொள்ளலாம்.

Sunday, March 04, 2012

அரவான் - திரைவிமர்சனம்


 நாவல்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள் வெளிநாடுகளில் மட்டுமே எடுக்க படும். இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், நாவல்களில் உள்ள கதைக்கு உயிர் தரும் வேலையில் தமிழ் திரையுலகத்திற்கு உயிர் மூச்சான மசாலாவை எடுத்து கொண்டு வர இயலாது. அதே போல, திரைப்படத்தின் வேக தன்மை, தீடிர் திருப்பங்கள் என்பதையும் கொண்டு வர இயலாது. இதனால் தமிழ் நாட்டில் பல நாவல் ஆசிரியர்கள் இருந்தும், இன்னும் தமிழ் திரையுலகில் கதை தேடும் சூழ்நிலை உள்ளது. உதாரணமாக 1980ல் எடுத்த திரைப்படத்தை மீண்டும் இப்போது எடுக்கும் நிலையை சொல்லலாம். இந்த விதியை மாற்றி, நாவலை அடிப்படையாக கொண்ட கதை எடுத்த இயக்குனர் வசந்த பாலன் அவர்களுக்கு முதல் பூங்கொத்து.

அரவான்... படம் பார்த்து கொண்டு இருக்கும் போது, நண்பர் ஒருவர் அதற்க்கான பொருளை கேட்டார். எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்படத்திலேயே அதற்க்கான காரணம் சொல்லபட்டு இருந்தாலும், இப்படத்திக்கு முன்னால் நான் எங்கேயோ படித்த நியாபகம் என்று மட்டும் தெரிந்தது. கடைசியாக பார்க்கும் போது, என் வலை தளத்திலேயே 2009ம் ஆண்டு அரவானை பற்றி பதிவு செய்து உள்ளேன். இதோ அந்த பதிவு "அரவான் - மகாபாரதம்".


18ம் நூற்றாண்டில் திருட்டை தொழிலாக கொண்ட ஒரு ஊரில் வசிக்கும் நபர் பசுபதி மற்றும் உறவினர்கள். அவ்வூரின் பெயரை மட்டும் பயன்படுத்தி திருடும் அனாதையான ஆதி,ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகின்றனர். ஒரு சமயத்தில், பசுபதியின் உயிரை ஆதி காப்பாற்ற, மேலும் அவர்கள் நட்பு கூடுகிறது. ஊரின் மானபிரச்சனை உடன்,பசுபதி உயிருக்கு ஆபத்து வரும் போது, அனாதையான ஆதி தான் யார் என்பதை கூறுகிறார். இதனால் ஆதிக்கு மேலும் பிரச்சனை இறுகுகிறது. அப்பிரச்சனையில் இருந்து யார் தப்பித்தனர், முடிவு என்ன என்பதே கதை.


இங்கே கதாநாயகன் என்பதை விட, கதையின் நாயகனாக இருக்கும் ஆதிக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல நடிகரான பசுபதியை மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சி. முதல் பாதி முழுவதும் பசுபதியின் ஆளுமை தான்.  இந்த இரண்டு பேருக்கும் போட்டி நடிகன் கரிகாலன். அருமையான நடிப்பு. கதாநாயகிகளாக தன்ஷிக மற்றும் அர்சன கவி. அவர்கள் தன் வேலையை சரியாக செய்து இருக்கின்றனர்.  வெயில் படத்தின் நன்றி கடனாக பரத்தும், அங்காடி தெரு நன்றி கடனாக அஞ்சலியும் இரண்டு காட்சிகள். அனைத்து கதாபத்திரங்களையும், மீறி இரண்டு பேர் தனியாக நிற்கின்றனர் என்றால் அது ஒளிபதிவாளர் சித்தார்த் மற்றும் ஆர்ட் இருக்குனர் விஜய். இப்படம் திருட்டு தொழிலை மையமாக கொண்டதால், பல இரவு காட்சிகள். இரவு என்பதை மறக்க வைத்து, நம்மை கதைக்குள்ளே அழைத்து சென்றது ஒளிபதிவளரின் வெற்றி எனலாம். அவருக்கு இரண்டு பூங்கொத்து. இதே போல் 18ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையாக எடுத்து, அக்காலத்தை நம் முன்னால் கொண்டு வந்ததற்கு ஆர்ட் இயக்குனருக்கு  மூன்றாவது பூங்கொத்து.  இத்திரைப்படத்தின் இன்னொரு முக்கிய நபர் கதை ஆசிரியர் மற்றும் வசன ஆசிரியர் வெங்கடேசன். மக்களின் வாழ்க்கை முறை திரையில் எவ்வளவு காட்டினாலும், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வார்த்தைகள் தான் மிக முக்கியம். வெங்கடேசன் தன் வார்த்தைகள் மூலம், அவர் 18ம் நூற்றாண்டை உணர வைத்து இருப்பார். இதற்காக அவருக்கு நான்காவது பூங்கொத்து.



இத்தனை பெரிய வெற்றி இருந்தும், முடிவில் ஒரு நெருடல். திரைப்படத்தின் முடிவில், "18ம் நூற்றாண்டிற்கு பிறகு பிரிட்ஷ் காலத்தில் மரண தண்டனை நிறுத்த பட்டது. இன்னும் உலகில் நாடுகள் மட்டுமே மரண தண்டனையை வைத்து உள்ளது. மரண தண்டனை ஒழிப்போம்". இப்படம் மரண தண்டனை பற்றி சொல்கிறது என்பதை, கடைசி வரை நம்மால் உணர முடிய வில்லை. கதை களத்தின் படி, பலி இடுவதற்கும் மரண தண்டனைக்கும் என்ன தொடர்பு என்பதை யோசிக்க வைக்கிறது. இந்த சின்ன விஷயத்தை ஒதுக்கி வைத்து பார்த்தால், வசந்த பாலன் மீண்டும் நீருபித்து இருக்கிறார் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.

எல்லாம் நன்மைக்கே

சில நேரங்களில் அனைவருக்கும், ஒரு மாற்றம் தேவைபடுகிறது. மாற்றத்தை சில சமயம் நாமே தேடி கொள்கிறோம். சில பேருக்கு தானாக மற்றவர்களால் கட்டாயமாக தர படுகிறது. ஆனால் அந்த மாற்றத்தை தேர்ந்து எடுத்து விடுவதற்குள் பல கஷ்டங்களை சந்திக்க நேருகிறது. ஆனால் அந்த கஷ்டங்கள் எல்லாம் நமக்கு தெரிய காரணம், நாம் இருந்த வசதியான மற்றும் சூழல் தான். அதை எல்லாம் மீறி, புதிதாக கிடைத்த மாற்றத்தில் கூட, பழைய சூழலை தான் எதிர்பார்க்கிறோம். அங்கும் ஏமாற்றம் தான். சில பேர் மட்டுமே, இந்த ஏமாற்றத்தை சின்ன விஷயமாக எடுத்து கொள்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, எனக்கும் அந்த ருசியை பார்க்கும் தருணம் கிடைத்தது. வரும் நாட்களில் மட்டுமே, அந்த ருசி இனிக்கிறதா அல்லது கசக்கிறதா என்னால் சொல்ல முடியும். இருந்தாலும் எல்லாம் நன்மைக்கே