Friday, July 08, 2011

என் மனதில் இருந்து சில துளிகள்


மதுரையில் அதுவும் திருப்புரங்குன்றம் அருகில் முத்து தேவர் பள்ளியில் படித்தால், எப்படி இருப்பார்கள் என்று சொல்லாமலே தெரியும். அந்த வழியில் வந்த நான், முதல் முதலாக உடன் வேலை செய்யும் நபர்கள் மதிய உணவிற்கு வெளியே அழைக்க, நான் உடனடியாக சரி என்று சொல்ல, ஆட்டம் ஆரம்பம் ஆனது. நான் தான் சின்சியர் சிகாமணி ஆயிற்றே. நான் சரியான நேரத்திற்கு செல்ல, என்னுடன் பேசிய நண்பர்கள் யாரும் சொன்ன நேரத்திற்கு வராமல் நான் மட்டும் அங்கு மாட்டி கொள்ள, மற்ற அனைவரும் வந்து விட்டனர். இதில் என்ன இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு, அங்கு வந்தவர்கள் அனைவரும் அமெரிக்கா வெள்ளை இன மக்கள். சில பேருடன் மட்டுமே நான் தொழில் ரீதியாக பேசி வந்து வந்துள்ளேன். அதுவும் ஐந்து நிமிடம் மட்டுமே. என்னுடன் நெருங்கி பழகி வரும் அமெரிக்கா வெள்ளை நபரும் அங்கு வரவில்லை. எவ்வளவு நேரம் தான் நான் தனியாக நிற்பது நினைத்து, அவர்கள் மத்தியில் நானும் சேர்ந்து கொண்டேன். அவர்களே தன்னை அறிமுக படுத்திக் கொண்டு, என்னை பற்றி கேட்க, பெயர் சொன்ன உடன் அறிந்து கொண்டனர். இந்தியர்கள் சில பேர் வந்து இருந்தாலும், அவர்கள் அவர்களுடைய நண்பர்கள் அமர்ந்து கொண்டனர். அனைவரும் அமர்கையில், என்னை சுற்றி வெள்ளை இனத்தவர் அமர்ந்து கொண்டனர். நாங்கள் சென்றது இந்திய உணவு கிடைக்கும் இடம். அவர்களுடன் என்ன பேச என்று நினைத்து கொண்டு இருக்கையில், எடுத்த உடனேயே கார உணவை அவர்கள் எடுத்து உண்ண, அவர்கள் முகம் முழுவதும் சிவப்பாக மாறியது. அவர்களை பார்க்க எனக்கு பாவமாக இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலை.

மெதுவாக அவர்கள் என்னை பற்றி அவர்கள் கேட்க, தொழில் ரீதியான அனுபவத்தை முடிக்க, மெதுவாக அவர்களின் வாழ்க்கை பற்றி போனது. அமெரிக்காவை பற்றி நம் (இந்திய) மக்கள் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் ஒன்று.  அவர்களுடைய குழந்தைகளை அறிமுக படுத்தும் போது சொல்லும் விஷயம், "எங்கள் குழந்தைகள், என் குழந்தைகள், என் மனைவியின் குழந்தைகள்". என்னுடன் அமர்ந்த ஒரு வெள்ளை நபர், இதே விஷயத்தை அப்படியே சொல்லும் போது, என்னுடைய எண்ண ஓட்டத்தை எண்ணி பாருங்கள். என்ன இப்படி மானங்கெட்ட கலாச்சாரம் என்று உங்களுக்கு நினைப்பு வந்தாலும், அவர்களின் வாழ்க்கை முறை சரி என்றே எனக்கு தோன்றியது. இங்கே இருக்கும் சுய உரிமை மற்றும் சுய மரியாதையை போல் எங்கும் நான் கேட்டது இல்லை. இங்கு வேலை செய்பவர்கள் அமெரிக்கா மக்கள் என்றாலும், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, மெக்ஸ்சிகோ, ரஷியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள், என்று பல விதம். அவர்கள் கூறும் கதையை கேட்டால், அமெரிக்கா மக்களின் நல்ல வாழ்க்கை முறையை அறிய முடியும். இந்திய மக்கள் பல பேர் அமெரிக்கா மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நன்றாகவே நான் அறிவேன். ஏன் என்றால், நான் இங்கு வருவதற்கு முன், என் எண்ணமும் அது தான். ஆனால் பல இடத்திற்க்கு சென்று பல மக்களை பார்த்து வந்து பிறகு தான், நான் என்னுடைய தவறை உணர்ந்தேன். எப்படி இருந்தாலும், இந்தியா மக்களின் வாழ்க்கை தான் மகத்தானது என்பது நான் அறிவேன்.

ஏற்கனவே நான் சென்னது போல் என் இடம் கிராமம் போல் இருக்கும். என் இடத்தில் இருக்கும் அமெரிக்கா மக்கள் அனைவரும் நிம்மதி வாழ்க்கையை விரும்புபவர்கள். கடந்த 1.5 ஆண்டுகளில் நான் கண்ட அமெரிக்கா மக்களின் குடும்ப வாழ்க்கை பாராட்டும் விதமாக இருந்து இருக்கிறது. என்னுடன் பேசி கொண்டு இருக்கும் நபர், அவரின் இரண்டாம் காதலை கூற, மிக ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தேன். முடிவில் என்ன வாழ்க்கைட இது என்ற சொல் எனக்கு வந்து விட்டது. இந்த அனுபவம், என் வாழ்வில் மிக முக்கியமானதாக கருதுகிறேன்.

இந்த பதிவின் முதல் வாக்கியத்தை நான் படித்து பார்க்கும் போது, முடிவில் இருக்கும் நிலைமையை பார்க்கும் போது, என் வாழ்க்கையை என்னால் பிரிந்துக் கொள்ள முடியாத நிலை என்று அறிகிறேன்.

1 comment:

Kishore Kumar said...

Orey kolapama irukku... Enna solla varinga?