சமீபகாலமாக பார்க்கும் இடம் எல்லாம் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் செய்யும் தவறுகள், அரசியல்வாதிகளின் ஊழல்கள் என்று தெரிகின்றன. திரையுலகம் என்ற மாயையை உடைத்து எறிந்து, இச்செய்திகள் வருகின்றன என்றால் பெரிய விஷயம் தான். facebook ,நண்பர்களின் வலைத்தளம், பதிவர்களின் பதிவு, தினசரி செய்திதாள்கள், வாரந்திர புத்தகம் என்று பல இடத்தில் இதே மாதிரியான செய்திகளை பார்க்க முடிகிறது. எனக்கு மட்டும் இந்த மாதிரியான செய்திகள் தெரிகின்றனவா என்ற சந்தேகம் கூட சில சமயங்களில் இப்போது வந்து விடுகிறது. ஒரு வேளை, மீடியா என்ற தொழில்நுட்பம் சில மிகைபடுத்தி சொல்வதால் தான் எங்கும் இச்செய்திகள் தெரிகின்றனவா என்ற கேள்வி இருக்கிறது. இதை மெய்பிக்கும் வகையில் தான், கலைஞர் அவர்கள் கூட, பத்திரிக்கை காரணமா தான் தன் மகள் சிறையில் இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் யோசித்து பார்த்தால், பல காரணங்கள் புலப்படுகிறது.
· பத்திரிக்கை என்னும் தொழில்நூட்பம் முன்னேறி இருக்கிறது. பத்திரிக்கை இணையம் வழியாக ஊடுருவ ஆரம்பித்து உள்ளது. இன்றைக்கு படித்த விறுவிறுப்பு தளத்தில், "பத்திரிகை சர்க்குலேஷன் பற்றி வெளியாகியிருக்கும் லேட்டஸ்ட் தரவுகள், தமிழகப் பத்திரிகைகளுக்கு ஆனந்தத்தைக் கொடுப்பதாக இல்லை. தமிழக வாசகர்கள், தமது தினசரிச் செய்திகளுக்காக பத்திரிகைகளைவிட இணையத் தளங்களையே நாடுகிறார்கள் என்பதையே இந்தத் தரவுகள் காட்டுகின்றன."
· இணையத்தில் பதிவர்கள் அதிகம் ஆகி உள்ளனர்.
· மக்கள் விழிப்புணர்வு பெற்று உள்ளனர் என்பதே இதன் பொருள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தெளிவாக காட்டுகிறது.
· மிக முக்கியமாக, தற்போது ஊழலில் சிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் என்று அனைவரும் தமிழகத்தை சார்ந்தவர்கள். அதனால் என்னவோ, தமிழ் இருக்கும் அனைத்து இடத்திலும், அனைத்து விஷயங்களை பற்றியும் விரிவாக வருகிறது. வடஇந்திய அமைச்சர்கள் ஊழல் என்றால், இச்செய்திகள் வருமா என்றால் கேள்வி தான்.
மேல உள்ள லிங்கில் முழுவதுமாக படித்து பார்த்தால், அரசியல்வாதிகளும், அரசாங்க ஊழியர்களும், பெரும் பணம் படைத்த தொழில் அதிபர்களும்
· பணத்தை கொள்ளை அடிப்பது இல்லாமல் (தொலைபேசியின் இரண்டாம் அலைவரிசை கொள்ளை)
· இந்திய நாட்டின் தேசிய சொத்தை தனியாருக்கு சொற்ப விலைக்கு கொடுத்து, தனியார் நிறுவனங்கள் கனிம வளங்களை சுரண்டுவதும் இல்லாமல் (ஆந்திராவில் தனியார் நிறுவனம் எண்ணை வளத்தை கொள்ளை அடித்தல்)
· மக்களின் வாழ்வை கொடுப்பதை நிறுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்/ இனத்தை அழிக்கும் முயற்சியில் இருப்பதோடு இல்லாமல் (ஆந்திர, ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரபிரதேசம் போன்ற இடங்களில் கனிம வளத்தை எடுக்க, அங்கு வாழும் பழம்குடியினரின் போராட்டத்தை ஒழிக்க, துணைஇராணவ படை இறக்கி விடபட்டுள்ளது. இந்த மறைமுக இராணுவ படை, அவர்களுக்கு தெரியாமல் அந்த பழம்குடியினர் என்ற இனத்தையையே வேரோடு அழிந்து கொண்டு இருக்கின்றனர். அதோடு இல்லாமல், அணுமின் நிலையத்தால் வரும் அழிவை தெரிந்து கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் அதிசக்தி வாய்ந்த அணுஆலையை வரவிடாமல் தடுக்கும் மக்கள் மீது துணை இராணுவத்தை ஏவி விடுதல்)
· உலகமயம் என்ற பெயரை பயன்படுத்தி, சீர்கெட்டு போயிருக்கும் நிர்வாகத்தை/பணபுழக்கத்தை சரி செய்கிறோம் என்ற பெயரில், வரிகளை கூட்டி/வட்டி விகிதத்தை கூட்டி/ தனியாரின் பேச்சை கேட்டு அத்தியாவசமான பொருட்களின் விலையை ஏற்றி பணத்தை பிடுங்கி கொள்வது இல்லாமல்,
· பதினோரு மாதத்தில், பதினோரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தி மகத்தான சாதனை செய்ததோடு இல்லாமல், மீண்டும் அடுத்த வாரத்தில் டீசல் உயர்வு என்று
இந்திய அரசாங்கம் அனைத்திக்கும் துணை நிற்கிறது என்பது தான் கொடுமையே. இதே போல் மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் பல தவறுகள் நடைபெறுகின்றன.
இந்தியாவின் நிலைமையை சரி செய்ய எத்தனை காந்தியடிகள் வந்தாலும், சீராக்க முடியாது என்பதை நினைக்கும் போது, எதிர்கால இந்தியாவின் தலை எழுத்தை பார்க்கும் போது, அவ்வளவு தானா என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை.