ஜூலை முதல் வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறதே, ஊர் சுற்றிப் பார்க்க வேண்டாமா என்று நண்பர்கள் மே மாதமே விவாதம் தொடங்க, அடுத்த மூன்று நாட்களில் அமெரிக்காவின் சூதாட்ட நகரம் மற்றும் பாலைவன சொர்க்கலோக நகரம் என்று அழைக்கப்படும் லாஸ் வேகஸ் என்று முடிவாகி, அடுத்த ஒரு வாரத்தில் பயணத்திற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளும் முடித்தாகி விட்டது. வெள்ளிக் கிழமை இரவு பயணம் ஆரம்பித்து திங்கள் இரவு மீண்டும் வசந்த மாளிகை என்று அளவில் அனைத்தும் கச்சிதம்.
வெள்ளிக் கிழமை மாலை பொழுதில் என் இடத்தில் இருந்து கிளம்பி, இரண்டு மணி நேர பயணத்திற்கு பிறகு ஸ்ப்ரிங்பில்டு (மிசோரி மாகாணம்) விமான நிலையத்தை அடைந்தோம். இங்கிருந்து பினிக்ஸ் செல்லும் விமானம் இரவு 09:30 மணிக்கு. நாங்கள் விமான நிலையத்தை அடைந்து, அனைத்து விதமான சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான புறப்படு இடத்திற்கு அடைய நேரம் இரவு 08:45. பினிக்ஸ்ல் நண்பர்கள் இருவர் இருப்பதால், எங்கள் கணக்குபடி இரவு 12:15க்கு பினிக்ஸ் அடைந்து நண்பர்கள் வீட்டில் இரவு தூங்கி விட்டு அவர்களையும் சேர்ந்து கொண்டு, அதிகாலை 05:30 மணிக்கு புறப்பட்டு மதிய நேரத்தில் வேகஸ் அடைந்து அங்கு சிறிது நேரம் ஒய்வு எடுத்துக் கொண்டு இரவில் முழுவதும் வேகசை சுற்றலாம் என்பது தான். ஆனால் முதலில் நாங்கள் பினிக்ஸ்க்கு புறப்பட வேண்டிய விமானம் வந்து சேரவில்லை. புறப்படுவதற்கு இரவு இரண்டு மணி ஆகும் என்று கூற எங்களுடைய திட்டத்தில் முதல் அடி. இரவு 12 அளவில் பினிக்ஸ்ல் பதிவு செய்து இருந்த கார் பற்றி நினைவுக்கு வர, கார் பதிவு குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கவில்லை என்றால், தானாகவே ரத்து ஆகிவிடும் என்று கூற எங்களுக்கு இரண்டாவது அடி (இரண்டு காரில் ஒன்று). அதே நேரத்தில் இரண்டாவது காரை பதிவு செய்யலாம் என்றால் நாங்கள் சென்ற விமான நிலையத்தில் கார் இல்லை என்றும், அருகில் உள்ள இன்னொரு விமான நேரத்தில் தான் போய் எடுக்க வேண்டும் என்று கூற மூன்றாவது அடி. இதன் படி எங்களுடைய தூக்கம் முழுவதும் பயணத்திலேயே முடிந்து விட போகிறது என்று எங்களுக்கு தெரிந்து விட்டது.
பினிக்ஸ் 2 லாஸ்-வேகஸ் |
No comments:
Post a Comment