காலையில் குமார் பைக்கை ஸ்டார்ட் செய்து அவன் வடபழனியை தாண்டும் போது அதனுருகில் உள்ள பஸ் ஸ்டாப்பில் உள்ள ஒரு பெண் அவனையே பார்ப்பதாக அறிந்து அவனும் அவளை பார்த்து சிரித்து கொண்டே செல்கிறான். இப்படியே ஒரு வாரம் செல்ல, ஒரு நாள் வடபழனியை தாண்டும் போது, அப்பெண் தயங்கி அவன் முன்னால் நிற்க அவனும் பைக்கை நிறுத்த, அவள் என்னை அண்ணா நகரில் இறக்கி விட முடியாம? என்று கேட்க அவனும் பல் தெரியும் படி சிரித்து கொண்டே அத விட என்ன வேல என்று சொல்லி இரண்டு பேரும் கிளம்ப
சென்னை வெயிலிலும் கொடைக்கானலில் பைக் செல்லவதாக மனதில் நினைக்க, கோயம்பேடு சிக்னல் அருகில் அப்பெண் அவன் முதுகில் சரிய அவன் மனம் முழுவதும் வானவில் மற்றும் ஆயிரம் வண்ணத்துப்பூச்சி. அவனை விட வேகமாக ஒரு பைக் அவன் அருகில் வந்து அப்பெண் மயங்கி விட்டதாக கூற அவனுக்கு முதல் பதற்றம்.
எப்படியோ சிரமபட்டு அவளை அருகில் உள்ள சிறு மருத்துவ மனையில் அவன் பெயரை பயன்படுத்தி சேர்க்க, அவளை சோதனை அறைக்கு கொண்டு செல்கின்றனர். சிறிது நேரம் கழிந்து அவள் கர்ப்பமாக இருப்பதை அறிய அவனுக்கு இரண்டாவது பதற்றம். மருத்துவர் குமார் தான் அவளுடைய கணவன் என்று கூற, குமாரும் அதை மறுக்க மருத்துவருக்கு சந்தேகம் வருகிறது. மருத்துவர் குமாருக்கு தெரியாமல் காவல்துறையை அழைக்க, காவல்துறை அதிகாரி அங்கு வந்து குமாரை அழைத்து பேச குமாருக்கு மூன்றாவது பதற்றம். இதற்கு நடுவில் குமாருக்கு அவனுடைய கை தொலைபேசியில் அழைப்பு வர, அவனும் இன்னும் சிறிது நேரத்தில் வடபழனி வந்து விடுவதாகவும் கூறி அழைப்பை முடிக்கிறான்.
குமார் என்ன தான் கூறினாலும் காவல்துறை அதிகாரி அதற்கு மறுக்க, மருத்துவர் குமாரை சோதனை செய்தால் தெரிந்துவிடும் என்று கூற அந்த அதிகாரி ஏற்று சோதனைக்கு அனுமதிக்கிறார். சிறிது நேரம் கழித்து அந்த அதிகாரியே வந்து குமாரை பார்த்து நீங்கள் போகலாம், அப்பெண்ணின் முகவரி கிடைத்து விட்டது என்று சொல்லி போய் விடுகிறார். உயிர் போய் உயிர் வந்ததாக நினைத்து அவன் பைக் எடுக்க செல்லும் போது சன்னல் அருகில் அதிகாரியும் மருத்துவரும் பேசுவதை கேட்க முடிகிறது. அப்போது மருத்துவர் இன்னொரு அதிகாரியிடம் குமாருக்கு குழந்தை பெற்று கொள்ளும் ஆண்மை குமாருக்கு இல்லை என்று கூறும் போது குமாருக்கு மனதில் எரிமலை வெடிக்க, கை உதறல் உடன் நான்காவது பதற்றம். அழுது கொண்டே வடபழனிக்கு புறப்பட மீண்டும் கை தொலைபேசியில் அழைப்பு. சீக்கிரம் வடபழனிக்கு வந்து விடுவதாக கூறி அழைப்பை முடிக்கிறான்.
வடபழனிக்கு அருகில் வர வர அப்போது தான் அவனுடைய நிலைமை நினைவுக்கு வருகிறது. வீட்டை அடைந்த உடன் ஐந்தாவது பதற்றம். குமாருடைய இரண்டு குழந்தைகள் அப்பா என்று வந்து அணைக்க அவன் மனைவி கை தொலைபேசியுடன் வெளியே வர அப்போது குமாருக்கு மயக்கம் வர சரியாக இருந்தது.