Thursday, June 24, 2010

திருமண வாழ்த்துக்கள் - பிரேம்




எனது பொறியியல் கல்லூரி நண்பரான உயர் திரு. பிரேம்  அவர்களுக்கு இன்று 24ம் தேதி திருசெந்தூரில் பிரமாண்டமான  முறையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

Monday, June 21, 2010

திருமண வாழ்த்துக்கள் - விக்ரம் பிரசன்னா



எனது பொறியியல் கல்லூரியில் உற்ற நண்பர்களில் ஒருவரான (போலி சாமியார் என்று கொடுமையாக அழைக்கப்படும்),  பலவகை திறமைகளை கொண்ட திரு. விக்ரம் பிரசன்னா அவர்களுக்கு இன்று 21ம் தேதி மதுரையில் பிரமாண்டமான  முறையில் திருமணம் நடைப் பெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய திருமண வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்


இந்த திருமணத்தை ஒட்டி (ஆனந்த?) கண்ணீர் உடன் இருக்கும் சிங்கத்துக்கு, என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்..

கலவை விமர்

ஸ்ரேக் - ஆங்கிலம்

இரவு 09:55 மணிக்கு திரைப்படம். நாங்கள் திரை அரங்கின் பார்கிங் இடத்திற்கு வரும் போது நேரமோ இரவு 09:50. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து, காரை நிறுத்தி விட்டு வேகமாக டிக்கெட் வாங்க ஓடினோம். அன்றைக்கு பார்த்து வீட்டில் இருந்து போன் அதுவும் முக்கியமான விஷயமாக. வீட்டில் கூட அப்புறமாக பேசுகிறேன் என்று கூறி விட்டு விட்டு, கவுன்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கிற்கு ஓடினோம். 3D படம் என்பதால், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதாலும், பின் சீட்டில் தான் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இந்த பதற்றம் காரணம். ஒரு வழியாக உள்ளே சென்று பார்த்தல், ஒரே அதிர்ச்சி.  அந்த முழு அரங்கில் நாங்கள் மட்டுமே. ஐயோ, ஐயோ. முடியலே.  எங்கள் மூன்று நபருக்கு ஆகா, படத்தை திரை இட்டார்கள். திரைப்படம் நன்றாக தான் இருந்தது என்பது வேறு விஷயம்.


வேதம் - தெலுகு
தெலுகு திரை உலகமும் பல நேரங்களில் நல்ல திரைப்படங்களை தயாரித்து காட்டும். அப்படி பட்ட நல்ல திரைப்படம். நல்ல கதை, திரைக்கதை, மற்றும் நடிகர்கள். மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் எவ்வாறு இருந்தார்களோ, அதோ போல் இப்படத்தில் அரசு பொது மருத்துவமனையில். கண்டிப்பாக திரை அரங்கிலேயே இப்படத்தை பார்க்கலாம்.


பாசஞ்சர் - மலையாளம்
ஒரு சாதாரண மனிதனின் நல்ல எண்ணம், பல பேருடைய உயிரை காக்கிறது. நல்ல நடிகர்கள் மற்றும் திரைக்கதையுடன் அமைந்த படம். இம்மாதிரியான கதையை தேர்ந்து எடுத்து, திரையிட்ட இயக்குனரின் தைரியத்திற்கு சலாம்.


ராஜநீதி - ஹிந்தி
அண்ணன்,தம்பி வாரிசுகள் மும்பையின் முதல் அமைச்சர் பதவிக்காக போட்டி இட்டு யார் வெல்கின்றனர் என்பது தான் கதை. வழக்கமான அரசியல் திரைப்படம் என்றாலும், திரைக்கதை தான் இப்படத்தின் பலம். இப்படத்தை பார்க்கும் போது, கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு இதே மாதிரியான சூழல் தமிழ் நாட்டிற்கு வரும் என்ற எண்ணம் தோன்றும் என்பதில் ஐயம் இல்லை.

Wednesday, June 16, 2010

டெவில் டென் - மாநில பூங்கா - பயணம்

அர்கன்சாஸ், இயற்கையின் மாநிலம் என்ற இடத்தில் இருப்பதால், பெருநகரத்தில் அல்லது வெளி மாநிலத்தில் இருந்து  மனஅமைதியை தேடி வரும் அனைத்து மக்களுக்கும் தேவையான மலைகள் , காடுகள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் என்று அனைத்தும் எனக்கு மிகஅருகில். டெவில் டென் என்ற மாநில பூங்கா என்று எங்களுக்கு அருகில் இருப்பத்தை அறிந்து, பயணத்தை ஆரம்பித்தோம். 


அந்த பூங்காவில் உள்ள அரசாங்க அலுவலம் போய் சேருவதற்கு காட்டு பாதையில் இருபது நிமிடம் காரில் பயணம் செய்ய வேண்டிருந்தது. செல்லும் வலி எங்கும் அடர்ந்த காடுகள். தொலைபேசி தொடர்பு சில நிமிடங்களிலே தொடர்பு காணாமல் போனது. அன்று நல்ல வெயில் இருந்தாலும் காட்டு பகுதியில் சிறு தூரம் சென்ற உடன் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. காரின் கண்ணாடி ஜன்னல்களை திறக்கலாம் சென்றால், பூச்சிகள் வந்து விடும் என்ற பயம் காரணமாக மூச். 


ஒரு வழியாக அலுவகத்தை அடைந்து பார்த்தல், காரை நிறுத்த இடம் இல்லை. அவ்வளவு கூட்டம். வெளியில் வந்து பார்த்தல் அந்த இடம் முழுவதும் சிறுவர்கள் கூட்டம். போச்சுட சின்ன பசங்க இடத்திற்கு வந்துட்டோம் போல என்று நினைத்து கொண்டே, உள்ளே போய் விசாரித்து விட்டு சுற்றி பார்க்க கிளம்பினோம். எங்கு போனாலும் சிறுவர்கள் கூட்டம், அவர்களின் பெற்றோர்கள் அதுவும் அந்த அடர்ந்த காட்டில். ஒன்றும் இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பலாம் என்ற முடிவின் போது, மலை மேல் செல்வதற்கு படி போன்ற அமைப்பு உடைய கற்களை கண்டோம்.
  மேலும் அந்த சில மக்கள் மலையின் மேலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டு இருந்தனர். அங்கு என்னவென்று விசாரித்ததில், மலையின் மேல் பல குகைகள் இருப்பதாகவும் அதை பார்க்க மலை ஏற வேண்டும் என்றும், ஒவ்வொரு மலை ஏறும் வழியும் இரண்டு மைல் முதல் பதினைந்து மைல் வரை இருப்பதாவும், நம்முடைய உடல் நிலைமையை பொறுத்து செல்லலாம் என்றும் கூறி விட்டனர். 


முதல் முறையாக இங்கு வருவதால், அருகில் உள்ள குகைக்கு மலை ஏறி சென்று வரலாம் என்று புறப்பட்டோம். முதல் குகையை பார்க்கவே குறைந்தது இரண்டு மணிநேரமாவது மலை ஏறவேண்டும். மலை ஏறி சில காலம் ஆகி விட்டதால் முதல் பத்து நிமிடத்தியிலே கண்ணை கட்ட ஆரம்பித்து விட்டது. வந்தாகிவிட்டது என்று நினைத்துக் கொண்டே முடியாமல் மேலும் ஏற ஆரம்பித்தோம்.
  ஏறும் பாதையில் மரங்களில் சிவப்பு நிற வண்ணம் காண முடிந்தது. சிவப்பு நிறம் நம்மை அழகாக வழிநடத்தி சென்றது. குகையில் வவ்வால்கள் வந்து தங்க ஆரம்பித்து விட்டதாலும், புது வகையான பூச்சிகள் சிலவற்றை சில பேர் குகையில் கண்டதாலும், குகைக்கு உள்ளே செல்லும் வழி அடைத்து விட்டதாகவும் வெளியில் இருந்து பார்க்க முடியும் என்று பலகை ஒன்று காண முடிந்தது. மலை ஏறும் போது, சில கற்களுக்கு அடியில் பனிக் கட்டிகளை காண முடிந்தது. 



நீண்ட நாளைக்கு பிறகு மலை ஏறுதல் என்பதால், அப்ப அப்ப முடியல. ஆனால் நல்ல இயற்கை கண்ட மனநிறைவு மற்றும் வித்தியாசமான அனுபவம் தான்.

Tuesday, June 15, 2010

உண்மை

உலக வெப்பம் அதிகரிப்பதால், விபரீத விளைவுகள் ஆரம்பமாகி விட்டதா என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலக வெப்பம் அதிகரித்து வருகிறது. செயற்கை எரிபொருள் அதிகம் பயன்படுத்துவதால், வெப்பம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது இப்படியே போனால், 2020 ஆம் ஆண்டில், உலகில் பெரும் அழிவுகள் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்து விட்டனர். இப்போது, பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துவிட்டது. வானிலை மாற்றம் ஏற்படவும் ஆரம்பித்துவிட்டது. 

இப்படி பல செய்திகள் செய்தி தாள் மற்றும் திரை மூலமாகவும், வெளிபடுத்திக் கொண்டு இருக்கும் நேரத்தில், கீழே உள்ள சாதாரண படம் அனைத்து விஷயங்களையும்  விளக்கி, உண்மையை உணர வைக்கிறது.


Monday, June 14, 2010

iPhone 3GS

அமெரிக்க இளவயது மக்களிடம் கண்டிப்பாக ஒரு கையடக்க இணையதள வசதி உடைய கைதொலைபேசியை பார்க்க முடியம். இந்த கைதொலைபேசி எல்லாம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சாதனத்தை நானும் வாங்கி ஒரு மாதம் அருகில் ஆக போகிறது. அமெரிக்க வந்து இந்தியா செல்லும் அனைவரும் வாங்கி செல்லும் ஒரு சாதனம் தான் இது.



நான் வாங்கிய சாதனத்தின் (3GS) அடுத்த தலைமுறை சாதனம் (4G) இம்மாதம் வெளிவருகிறது. இதோ அதனுடைய வித்தியாசங்கள்

கையில் இருப்பதை கொடுத்து விட்டு, புதுசு வாங்கி விடுவோம் என்று நினைத்து ஆராய்ந்து பார்த்தல், தலையே சுற்றி விடும் போல் ஆகி விட்டது. ஆம், இதை உபயோக படுத்தினால், கையில் உள்ள காசை அனைத்தும் அவனிடத்தில் கொடுக்க விட்டு போக வேண்டியது தான்.  இதோ ஒரு சின்ன ஆராய்ச்சி முடிவு


Before - May 31st 2010
After – June 1st, 2010
Model
iPhone 3GS (16GB)
iPhone 3GS (16GB)
iPhone 4G (16GB)
Price
In Apple - $199
In Walmart - $97
In Apple - $149
In Apple - $199
Data plan
$30 – Unlimited
$15 – For 200MB
$25 – For 2GB
$15 – For 200MB
$25 – For 2GB
Contract Breaking fee
$175
$325
$325



நல்ல வேலை நான் பிழைத்து கொண்டேன் என்று தான் கூறவேண்டும்.

Sunday, June 13, 2010

திரைவிமர்சனம்


விடியும் வரை காத்திரு  - 1981

இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் திரு. பாக்யராஜ் என்பதை நீருபிக்கும் படம்.  திரைக்கதையை மட்டுமே மையமாக வைத்து, எதிர்மறை பாத்திரத்தில் தைரியமாக நடித்த பாக்யராஜ் அவர்களை கண்டிப்பாக பாரட்ட பட வேண்டிய விஷயம்.

Prince Of Persia The Sands Of Time – 2010

ஒரு கத்தி மற்றும் அபூர்வமான மண்ணின் மூலமாக உலத்தையே கடந்த காலத்திற்கு கொண்டு சென்று, போரின் மூலமாக அழிந்த நாட்டை காப்பாற்ற போராடும் நாயகன் மற்றும் நாயகி. இப்படத்திலும் அரசியல், போர், ராஜதந்திரம் என்று இருந்தாலும் சண்டை காட்சிகள் சொல்ல படவேண்டிய விஷயம். சமீபத்தில் வந்த திரைப்படங்களில், இப்படத்தை பார்க்கலாம்.

 Unthinkable - 2010

தீவிரவாதியை அமெரிக்க காவல்துறை எப்படி கையாளும், தீவிரவாதிகளின் மன உறுதி மற்றும் எண்ணங்கள், காவல்துறையின் பொறுப்பு என்று பலவகையான விஷயங்களுடன் உள்ள ஒரு அருமையான படம். 

அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற மூன்று ஊர்களில் அணு வெடிபொருளை தீவிரவாதி வைத்து விட்டு, காவல்துறையுடன் மாட்டிகொள்கிறான். தீவிரவாதி காவல்துறையிடம் அணு வெடிபொருள் உள்ள இடம் பற்றி கூறினாரா மற்றும் காவல்துறை வெடிபொருளை கண்டுபிடித்தனரா என்பது தான் திரைப்படம். 

முதியோர்கள், சிறு குழந்தைகள், இதய பலவீனமானவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பார்க்க முடியாத வன்முறையான படம்.