இன்றைக்கு எனக்கு தொழில் முறை நண்பரின் திருமண பத்திரிகை கிடைத்தது. அதில் தமிழில் சில வாக்கியங்களை கண்டு குறுகி போனேன்.. அச்சொற்கள் தமிழில் இருந்தும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை... இதோ அந்த வாக்கியங்கள் கீழே... குறிப்பாக இது கவிதையும் இல்லை, சமஷ்கிரிதத்திலும் இல்லை மட்டும் தெளிவாக தெரிகிறது என்று நம்புகின்றேன்...
அன்னவளை, 'அல்லல்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியோடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான்..
படர்ந்து ஒளி பறந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாலுமே, அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது என் உள்ளம் நண்ணியே.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினர்.
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கெளசிகனை, 'மேலாய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மணநாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான்.
மன்னரும், முனிவரும், வானுளோர்களும் ,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே.
அன்னவளை, 'அல்லல்' என, 'ஆம்' என, அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியோடு உழைத்து, ஆண்டு,
இன் அமிழ்து எழ, களி கொள் இந்திரனை ஒத்தான்..
படர்ந்து ஒளி பறந்து உயிர் பருகும் ஆகமும்,
தடந் தரு தாமரைத் தாலுமே, அல;
கடம் தரு மா மதக் களி நல் யானைபோல்,
நடந்தது, கிடந்தது என் உள்ளம் நண்ணியே.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்,
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினர்.
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி கெளசிகனை, 'மேலாய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மணநாள் ஆம்,
எல்லையில் நலத்த, பகல் என்று? உரைசெய்க!' என்றான்.
மன்னரும், முனிவரும், வானுளோர்களும் ,
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலின், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது - அப் பொரு இல் கூடமே.
இந்திரன் சசியொடும் எய்தினான்; இளஞ் சந்திர மெளலியும் தையலாளொடும்
வந்தனன்; மலர் அயன் வாக்கினாளுடன் அந்தரம் புகுந்தனன் ; - அழகு காணவே
புரிஞ்ச மீனிங் சொல்லுங்கப்பா... இத டைப் அடிக்கவே கண்ண கட்டிரிச்சு...வர வர கல்யாண பத்திரிக்கையே ஏன் இப்படி எல்லாம் புரியாத பாஷையில இருக்குன்னு தெரியல..
2 comments:
இவ்வரிகள் கம்ப ராமாயணத்தில் இடம்பெற்று உள்ளன..இவ்வரிகள் புரிய நாம் தமிழ் இலக்கியம் அல்லவா பயின்று இருக்க வேண்டும்..?..இவ்வரிகள் 'தமிழ்' என புரிந்து கொண்டதற்கு நன்றி!! :)
நன்றி முத்துராமன் அவர்களே
தங்கள் வருகைக்கு நன்றி
அன்புடன்
வைகையின் சாரல்
Post a Comment