Wednesday, February 01, 2012

திரைவிமர்சனம் - The Train – மலையாளம் - 2011




11 ஜூலை 2006ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெடிகுண்டு நிகழ்வில் மலையாள மக்கள் எப்படி பாதிப்பு ஆனார்கள் என்பதை எடுத்து காட்டும் திரைப்படம். தெலுங்கில் வெளிவந்த வேதம் திரைப்படத்தில், வெவ்வேறு சூழ்நிலையில் இருக்கும் ஐந்து கதாபத்திரங்கள் முடிவில் வெடிகுண்டு வைக்கபடும் அரசு மருத்துவமனையில் ஒன்று சேரும் போது, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை காட்டி இருப்பார்கள். இதே போல் இந்த மலையாள படத்தில்  பல்வேறு சூழ்நிலையில் இருக்கும் சில மலையாள கதாப்பாத்திரங்கள், இந்த ரயில் வெடிகுண்டு நிகழ்வில் என்ன ஆனார்கள் என்பதை திரில்லாக காட்டி இருக்கும் படம்.

இந்த படத்தை எடுத்து பார்க்க வைத்ததே Best Actor மம்மூட்டிக்கா. கதாபாத்திரம் என்று பார்த்தால், மம்மூட்டி எப்போதும் போல் அவர் மும்பையில் வேலை பார்க்கும் காவல் அதிகாரி (வடிவேலு போல் ஒரு உயர் அதிகாரி அல்ல). எல்லோரையும்  தீவிரவாதி என்று சந்தேகத்தால், பல அப்பாவிகளையும் கொடுமை படுத்தியவர் என்று பேருடன் இருக்கும் நபர். இதனால் இவர் உண்மையாக ஒரு தீவிரவாதியை பிடிக்கும் சமயம், உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்காமல் போக, தீவிரவாதி தப்பி விடுகிறான்.


ஜெயசூர்யா, இசை அமைப்பாளர் ரஹ்மான் குழுவில் பட இடம் கிடைத்து, மும்பையில் இருந்து சென்னைக்கு செல்ல தயார் ஆகும் ஒரு நபர். காலையில் இருந்து மாலையில் சென்னை ரயிலை பிடிக்கும் முன், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள்.


இன்னொரு கதையின் பாத்திரம், தந்தை மெக்கா செல்ல, ஒரு மகள் பணத்தை ஏற்பாடு செய்யும் போது அவள்படும் கஷ்டம். பணம் கிடைத்த மகிழ்ச்சியில், வேகமாக வீட்டிற்கு செல்ல ரயில்வேக்கு செல்ல

பேரனை காண, ஒரு தாத்தா படும் கஷ்டங்கள். அவர் முடிவில் பேரனை காண ரயில் ஸ்டேஷன் செல்ல

இப்படி பல்வேறு மனிதர்கள், எப்படி இந்த மாதிரியான வெடிகுண்டு நிகழ்வுக்கு சம்பந்தமே இல்லாமல் பலி ஆனார்கள் என்பதை மிக துல்லியமாக காட்டி இருக்கும் படம்.

இப்படத்தில் ஏதோ ஒரு குறை. அதன் காரணமாக பலி ஆகும் மக்கள் மீது வர வேண்டிய வருத்தம் முடிவில் வர மறுக்கிறது. ஆனால் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்

Sunday, January 29, 2012

நாகூர் மீரான் - திருமண வாழ்த்துக்கள்

எனது தற்போதைய அலுவலக நண்பர் திரு. நாகூர் மீரானின் திருமணம் இன்று திண்டுக்கலில் நடைபெறுவதை தெரிவித்துக் கொண்டு, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ அல்லாவை வேண்டி கொள்கிறேன்.

நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் திண்டுக்கல் பயணம். திருமண விருந்தில் கிடைக்கும் பிரியாணியை நினைத்தால் இப்போதே எனக்கு உணவு அருந்தும் இடத்தை அறிய ஆவலாக உள்ளேன்.

Sunday, January 01, 2012

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2012


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Wish You A Very Happy New Year 2012

Friday, December 23, 2011

பாமரனின் இப்போதைய நிலை



இரண்டு வாரத்திற்கு முன்னால், மத்திய நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் "இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த அதே விலையில் தான் பருப்புகள், எண்ணை விலைகள் இருக்கிறது" என்று புள்ளி விவரம் கொடுத்து இருக்கிறார். அதையும் இந்த மத்திய அரசு அமோதித்து மகிழ்கிறது.  ஆனால் உண்மை நிலை என்ன?

எழுத்தால் புரிய வைப்பதை விட, புகைப்படத்தால்:


சென்னையில் கே.கே. நகரில் இருக்கும் சரவணா பவன் உணவகத்தின் விலை பட்டியலின் ஒரு பாகம்.

இரண்டு இட்லி - ரூ. 23
வடை - ரூ. 20
பொங்கல் - ரூ. 35
சாம்பார் வடை - ரூ. 25
தோசை - ரூ. 33
ஸ்பெஷல் தோசை - ரூ. 40
நெய் தோசை - ரூ. 75

சாதாரண வேலை செய்யும் மக்கள் யாரும் சரணவ பவன் உணவகத்தில் சென்று உணவு அருந்த முடியாது என்பது தான் நிதர்சனம். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்ச்சியை கொண்டாட பெரிய உணவகத்திற்கு செல்வோம். ஏன் என்றால்  அந்த மாதிரியான பெரிய உணவகத்திற்கு தினசரி செல்ல இயலாது.  ஆனால் இன்று அதே போல் ஒரு நிகழ்ச்சியை கொண்டாட சரவணாபவன் உணவகத்திற்கு சென்று உள்ளோம் என்ற பார்த்து கொள்ளுங்கள். அங்கு தினசரி சென்று உணவு எடுக்க முடியாத சூழ்நிலை.
சுருக்கமாக சொல்லவேண்டும் எனில், இந்தியாவில் சம்பளம் வாங்கி கொண்டு, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விலையில் பணத்தை கொடுத்து வாங்குகிறோம்.
இந்தியா திருநாட்டை இப்படி சீரழிக்கும் மத்திய அரசு எப்போது போகுமோ?

Thursday, December 22, 2011

மீண்டும் மீண்டும்...VI (நயாகரா பயணம்)


இந்தியாவில் இருக்கும் போது, அதுவும் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டை தவிர என்ற மற்ற மாநிலங்களுக்கு சென்றது இல்லை. ஆனால் வேலைபார்க்கும் போது தென் இந்தியாவில் இருக்கும் நான்கு மாநிலத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதை தவிர இந்தியாவில் வேறு எங்கும் செல்லவில்லை. ஆனால் டாலர் தேசத்தில் இருந்த ஒன்றரை வருடங்களில், எத்தனை மாநிலங்களுக்கு சென்று இருக்கிறோம், எந்த இடங்களை பார்த்து இருக்கிறோம் என்ற பட்டியலே தனியாக இருக்கும். சென்னை வந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டதால், நான் சென்ற அனைத்து மாநிலங்களையும் நினைவு படுத்துவதற்குள் போதும் போதும் என்ற நிலை. இதோ நான் சென்று வந்த பட்டியல்.

1.   அரிசோனா (Arizona)
2.   அர்கன்சாஸ், (Arkansas)
3.   இல்லினோயிஸ், (Illinois)
4.   ப்ளோரிடா, (Florida)
5.   ஜார்ஜியோ (Georgia)
6.   இண்டியன, (Indiana)
7.   கன்சாஸ், (Kansas)
8.   மிஸ்ஸெளரி, (Missouri)
9.   நெவட, (Nevada)
10.  நியூ ஜெர்செரி (New Jersey)
11.  நியூயார்க்  (New York)
12.  ஒக்ளஹோம, (Oklahoma)
13.  டென்னிசி (Tennessee)
14.  டெக்சாஸ் (Texas)
15.  வாஷிங்டன் டி.சி. (Washington DC)
16.  வெஸ்ட் விர்ஜினியா (West Virginia)

கீழே இருக்கும் மாநிலங்கள், வேறு மாநிலத்திற்கு செல்லும் போது கடந்து போன பாதை தவிர, அங்கு சென்று வேறு எதையும் பார்க்கவில்லை.

17.  ஓஹயோ, (Ohio)
18.  மேரிலன்ட், (Maryland)
19.  பென்ன்ச்யல்வானியா, (Pennsylvania)
20.  டெலவாரே (Delaware)

இங்கு இருக்கும் அனைத்து மாநிலங்களிலும், ஏதாவது சிறப்பு வாய்ந்த விஷயங்களை பார்த்து இருப்பேன். ஒரு வருடம், ஐந்து மாதங்கள் ஆகியும் நான் செல்ல நினைத்த இடம் நயாகரா நீர்விழ்ச்சி, அமெரிக்காவில் இருந்து கிளம்புவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருந்த நிலையில், நயாகராவை பார்க்காமல் போகிறேன் என்ற குற்ற உணர்வு என்னை ஆட்டி படைத்து கொண்டே இருந்தது. அமெரிக்காவை விட்டு போய் விட்டால் மீண்டும் வருவோமா என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் என்ற நிலையில், இன்னும் கிளம்புவதற்கு மூன்று வாரமே என்று இருந்தாலும், பொறியியல் கல்லூரி நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் கட்டயபடுத்தியதலும், இரண்டு வாரங்கள் கழித்து நயாகரா செல்வதற்கு அனைத்து பணிகளும் முடிந்தது. நயாகரா சென்று வந்த பின், நான்கு நாட்களில் நான் அமெரிக்காவை விட்டு செல்கிறேன்.

நான் அந்த நீர்விழ்ச்சி செல்ல, எப்போதும் போல் பல இடங்களுக்கு சென்று செல்ல வேண்டிய சூழ்நிலை.

Bentonville, AR -> Little Rock, AR -> Memphsis, TN -> Cleveland, OH -> Buffalo, NY

Buffalo, NY -> Clevelan, OH -> Chicago, IL -> Little Rock, AR -> Bentonville, AR

நயாகராவை அடைந்த பின் தான், எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஆம் நான் அடைந்த இடம் இந்தியாவில் இருக்கும் எதாவது ஒரு சுற்றுலா பகுதியா என்ற கேள்வி, என்னை மட்டும் இல்லாமல் என்னுடன் வந்து இரு நண்பர்களுக்கும் தான். எங்கு பார்த்தாலும் இந்திய மக்கள், இந்திய மக்கள் நடத்தும் கடைகள், உணவு கடைகள். ஆச்சிரியம் தான். நாங்கள் சென்ற முதல் அன்று 65  சதவீதம் இந்திய மக்கள். மிச்சம் இருந்தவர்கள் சீனா, அமெரிக்க, கொரிய மற்றும் மற்ற உலக மக்கள்.

நீர்வீழ்ச்சியை அடையும் போது "உலகம் எவ்வளவு அழகானது என்பதை அறிய சிறந்த இடம் நயாகரா" என்று கூறுவது மிகையல்ல. அந்த அழகிய பகுதியின் இயற்கை அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை. என்னால் எடுக்கப்பட்ட சில இடங்கள்.









முதல் உச்சகட்டம்:

இதை பார்க்கும் போது, ஏற்பட்ட அனுபவங்கள் தவிர ஒரு கப்பலில் நயாகரா அருவின் பக்கத்தில் கொண்டு சென்றனர். இந்த பயணத்தில் முதலாவது உச்சகட்டம்




இரண்டாவது உச்சகட்டம்:

உலகமே பார்க்க துடிக்கும் இந்த அழகிய நீர்வீழ்ச்சியில்,  அருவின் ஒரு மூலையில் தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது. அங்கே அருவியை கடந்து செல்ல முடியாது. அமெரிக்காவின் தொழில் நுட்பம் அங்கு தான் தெரிகிறது. அருவின் ஒரு புறத்தில் இருக்கும் மலையை குடைந்து,  மலைக்கு அடியில் வழியை அமைத்து, மெதுவாக தண்ணீர் விழும் இடத்தில் கொண்டு இறக்கி விடுகின்றனர்.  அந்த பாதையில் நடந்து சென்று, தண்ணீர் விழும் பகுதிக்கு சென்ற உடன், உலகின் மிக அழகிய நீர்வீழ்ச்சியில் நம்மை குளித்துக் கொள்ள முடிகிறது. 
  

நண்பர்கள் மேனன் மற்றும் கார்த்திக் மட்டும் கட்டாய படுத்தாமல் இருந்து இருந்தால், நான் கண்டிப்பாக இந்த பயணத்தை உதறி, வாழ்நாளில் மிக பெரிய தவறை செய்து இருப்பேன். அமெரிக்கா சென்று வரும் மக்கள், நான் நயாகரா போனேன் என்பதை ஏன் பெருமையாக செல்கிறார்கள் என்பது அப்போது தான் புரிந்தது. நயாகரா சென்று வந்ததினால் நானும் பெருமை கொள்கிறேன்.

இத்துடன் மீண்டும் மீண்டும் தொடர் நிறைவுபெறுகிறது