Monday, August 10, 2009

என்ன போட்டி இது

காலையில் இசை சம்மந்தப் பட்ட சேனலைப் பார்த்தல்

இசையருவி - குத்து மற்றும் உதயநிதி தயாரிப்பில் உருவான பாடல்கள்
சன் மியூசிக் - சன் தயாரிப்பில் உருவான பாடல்கள் மற்றும் புது பாடல்கள்
ஜெயா மாக்ஸ் - பழைய பாடல்கள் மற்றும் கேட்கும் படி உள்ள பாடல்கள்
ராஜ் மியூசிக் - கேட்கும் படி உள்ள பாடல்கள்

தொழில் போட்டியின் காரணமாக இசையருவி மற்றும் சன் மியூசிக் மட்டுமே தெரியும் வண்ணம் உள்ளது. காலையில் இந்த சேனலைப் பார்த்தல் வந்த பாடல்களே வந்து உயிரை வாங்கும்.

அவ்வபோது ஜெயா மாக்ஸ் தெரிந்தாலும் பெரிய கஷ்டம் தான். ராஜ் மியூசிக் சொல்லவே தேவையில்லை. தெரியவே தெரியாது.

தொழில் போட்டி இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்க்காக அதே தொழில் உள்ளவர்களை கொல்ல கூடாது... நடக்கும் முறையைப் பார்த்தல் கூடிய விரைவில் ராஜ் இருக்கவே இருக்காது...

இதை விட முக்கியமான விஷயம், எல்லா சேனல்களில் இருந்து அடையாள சின்னத்தை எடுத்துவிட்டால் எல்லாமே ஒன்று தான்..இதை தெரிந்து கொண்டால் சரி..

Sunday, August 09, 2009

வைரமுத்துவின் வரிகள்: டூயட் (1994)

எனக்கு கவிதைகளில் பற்று வர முக்கிய காரணிகளில் கீழ்கண்டதும் ஒன்று..

1. கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவம் நீயா?
பருவத்தின் தோட்டத்தின் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா?
இரவோடு நான் காணும் ஒளி வட்டம் நீதான்!
என் இரு கண்ணில் தெரிகின்ற ஒரு காட்சிதான்!
வார்த்தைக்குள் உள்ளாடும் உயிரோட்டம் நீதான்!
என் வாக்கியத்தில் இசையாகும் உயிர் மூச்சும் நீதான்!
தூரத்தில் மயிலிறகாய்த் தொட்டவளும் நீதான்!
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்!
காதலுக்குக் கண் திறந்து வைத்தவளும் நீதான்!
நான் காதலித்தால் கண்மூடிக்கொண்டவளும் நீதான்!


2. சத்தத்தினால் உண்ட பித்தத்தினால்
காதல் யுத்ததினால் எனது ரத்ததினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி.
இரு கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும், கெண்டை கால் பார்த்ததும்
உன்னை பெண் பார்த்ததும், தள்ளிப்பின் பார்த்ததும்
சுட்டாலும், மறக்காது நெஞ்சம்.
முற்றும் சொன்னத்தில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால், என்னை நிந்திப்பதால்,
நெஞ்சை தண்டிப்பதால், தலையை துண்டிப்பதால்,
தீராது என் காதல் என்பேன்.
நீ தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல், இல்லை நில் என்று கொல்.
என்னை வாவென்று சொல் இல்லை போவென்று கொல்.
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்.
நீ இல்லை என்றால் ஈடுகாடு பக்கம்.

Saturday, August 08, 2009

கண்ணீர் சிந்துகின்றேன்

ஐந்து வருடமாக என்னுடன் உறவாடியது... நண்பர்களை என் மேல் பொறாமை பட வைத்தது (கொஞ்சம் அதிகம் தான்...) இப்படி என்னால் சொல்லிக் கொண்டே போக முடியும். ஆனால் இன்று அது என்னுடன் இல்லை என்கின்ற போது கண்களில் நீர் வடிகிறது....

சென்ற செவ்வாய் கிழமை அன்று, இரவு சுமார் எட்டு மணிக்கு நான் மழையின் காரணமாக என் இரண்டு சக்கர வாகனத்தில் அதுவும் வேகமாக செல்லும் போது அதிக காற்றின் காரணமாக, அது வாகனத்தின் உள்ளே இருந்து பறந்து தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையின் நடுவே கீழே விழ! என் கண் முன்னால் ஐந்து அல்லது எட்டு வாகன ஊர்திகள் அதன் மேல் ஏற்றி... ஐயகோ.. முடியவில்லை...

காப்பாற்றி விடலாம் என்று நினைத்து சென்று பார்த்தல் மிச்சம் மீதி கூட கிடைக்கவில்லை.

எனது குளிர் கண் கண்ணாடிக்காக கண்ணீர் சிந்துகின்றேன்...

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம் - அப்படி என்றால் என்ன?

1939 ஆம் ஆண்டு எஸ். டி. எஸ். யோகி இயக்கத்தில், வி. வி. சடகோபன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ள திரைப்படத்தைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை.

முயற்சியின்றி அல்லது உழைப்பின்றி கிடைக்கும் நன்மை என்று பொதுவாக சொல்வதுண்டு. ஒரு விதத்தில் உண்மை என்று எனக்கு தோன்றுகிறது.

உழைத்து, உழைத்து உழைத்தப் பயனை அனுபவிக்க முடியாமல் (பல காரணங்கள் இருக்கலாம்) வீழ்தவர்/மாண்டவர் உண்டு.... எடுத்துக்கட்டாக உங்களையும் அல்லது என்னையும் கூட சொல்லலாம்

அதே போல் உழைப்பின்றி இருக்கும் சில மக்களுக்கு நன்மை மேல் நன்மை கிடைக்கின்றன. இதற்கு கூட எடுத்துக்கட்டாக உங்களையும் அல்லது என்னையும் சொல்லலாம். [ஆனால் நாம் உண்மையை எடுத்துக் கொள்ள மாட்டோம். (இது வேறொரு விஷயம்.. அதனால் இங்கு இதனை விட்டு விடுவோம்)]


இதற்கு பெயர் என்ன? மேலோட்டமாக பார்த்தல் அதிர்ஷ்டம் என்று சொல்வர்.

அப்படி என்றால் உண்மையிலே உழைத்த அந்த மனிதனின் வியர்வைக்கு மதிப்பிலையா அல்லது அவனுடைய வியர்வை அவனுக்கு சொந்தம் இல்லையா? அவன் செய்த தவறு என்ன? இப்படி என் மனதில் பல கேள்வி அம்புகள்...

குறிப்பு: வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கூடிய விஷயம் கைவிட்டு போனதால் இதைப் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று

சமீபத்தில் ரசித்தது

இருக்கின்ற எல்லா உறவுகளுடன் பாசமாக இருப்பது ஒரு கட்டம்.. இதே உறவுகள் நம்மை விட்டு பிரியும் போது அதை பக்குவமாக எடுத்துக் கொள்வது இன்னொரு கட்டம்.. வாழ்க்கை மிகவும் அழகானது.. -- அபியும் நானும்