Sunday, July 08, 2012

திருமண வாழ்த்துக்கள் – C. பாலாஜி


எனது பொறியியல் கல்லூரியின் உற்ற தோழனான நண்பர் C. பாலாஜி அவர்களின் திருமணம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. வெறி தனம் என்ன என்பதை  தெரிய, இவரிடம் தான் பழக வேண்டும். சைக்கிள் முதல் கார் வரை, படிப்பு முதல் பணம் வரை எந்த ஒரு விஷயம் என்றாலும் ஒரு வெறி கண்டிப்பாக இருக்கும்.  இப்படிபட்ட வெறி கொண்ட மனிதரை பார்ப்பது அரிது தான். அதே போல் மரியாதையாக நடத்தல் என்ற பெயரில் செய்யும் அக்கப்போர் தாங்க முடியாது. கல்லூரி காலங்களில் சேர்ந்து என் வீட்டில் படிக்கும் போதே, காலையில் வீட்டிற்கு வரும் போது மதியத்திற்கு டிபன் கொண்டு வந்து விடுவார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பாலாஜி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

திருமண வாழ்த்துக்கள் – A.N. கிஷோர் குமார்

நண்பர்கள் சில பேர் சொல்லும் விஷயம், "கல்லூரி வாழ்க்கை முடிந்தும், யார் உன்னுடன் இருப்பார்கள் என்று தெரிந்துக் கொண்டு, அவர்களுடன் நியாயமாக இருக்க வேண்டும்". ரத்த உறவு அல்லாமல் சில உறவுகளை பல வருடங்கள் வைத்து இருக்க முடியும் என்றால் அது பெரிய விஷயம் தான். அப்படி பட்ட நண்பர் தான் கிஷோர். 20 வருடங்களில் 9 வருடம் சேர்ந்து படித்து, 11 வருடங்கள் அப்படி இப்படி என்று சுற்றி கொண்டு இருக்கிறோம். இன்று அவருக்கு திரு. வைஷ்ணவி உடன் மதுரையில் திருமணம் நடைபெறுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.