நீண்ட நாட்களுக்கு பிறகு, மீண்டும் என் வலை பதிவில். நான் அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இரண்டு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவில் கடைசி மூன்று மாதத்தில், மனதில் ஒரு தடுமாற்றம். ஏதோ ஒரு சிந்தனை. யோசிக்க முடியாமல் ஒருவித எண்ணம். எடுத்த, எடுக்கின்ற மற்றும் எடுக்க போகும் முடிவுகள் சரியா என்ற என்ன ஓட்டம். இந்த மன ஓட்டங்கள், என்னை தொழில் வழியாகவோ அல்லது தனிபட்ட முறையிலோ என்னை கொல்லாமல் இருந்தாலும், பாதிக்கபட்டதாக நான் நினைத்து இந்த வலை பதிவு தான். என்னால் இந்த பகுதியே வர இயலாமல் போனது. மீண்டும் நம்பிக்கையுடன் கடந்த சில மாதத்தில் நடந்த என் அனுபவங்கள் இங்கே.
இந்தியா கிளம்புவதற்கு நான் தயாரான போது தான், இரண்டு விஷயங்கள் என் கண் வந்து ஓடின. அமெரிக்காவில் பல பகுதிகளுக்கு நான் சென்று இருந்தாலும், நயாகரா நீர்வீழ்ச்சி போகவில்லை என்ற மனக்குறையும், சென்னைக்கு செல்லும் போது எந்த பொருளை வாங்கி செல்ல வேண்டும் என்ற குழப்ப நிலையம் தான் அதிகமாக இருந்தது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் நான் பார்த்த வரையில் மின்சாதன சந்தையில் எந்த விதமான மாற்றம் இல்லை (இரண்டு/மூன்று பொருட்களை தவிர). 2 மாதத்தில் அனைத்து பொருட்களையும் அலசி, கடைசியாக தொலைகாட்சி தான் எடுத்து செல்ல சரியான பொருள் என்று அறிந்து, முடிவு செய்யலாம் என்ற நேரத்தில் தான், எப்படி அதை இந்திய வரை கொண்டு செல்வது என்ற கேள்வி என் முன் வந்தது. நான் திரும்ப வருவதற்கு என் கம்பெனி பயணசீட்டு வழங்குவதால், என் இடத்தில் இருந்து கிளம்பும் அனைத்து விமான கம்பெனியிலும் கேட்டு, அது போக யார் யார் இதுவரை தொலைகாட்சியை இந்தியாவிற்கு கொண்டு சென்று உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அனைவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டு, அதேபோல் எனது நண்பர்கள் மூலமாக இந்த பெட்டி இந்தியாவில் பிரச்சனை இல்லாமல் ஓடுமா என்ற விடைக்கு பதில் கிடைத்தபிறகு, ஒருவழியாக தொலைகாட்சியை வாங்கி விட்டேன். எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டில் இல்லாததை தான் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பெரிய தொலைகாட்சியை வாங்கினேன். சுமார் ஒரு மாதகாலமாக அதை உபயோகபடுத்தி, பிறகு தான் இந்த பெட்டி இந்தியாவிற்கு சரியாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. விமான நிலையத்தில் கூறியவாறு, தொலைகாட்சியை பெட்டியில் பத்திரபடுத்தி, விமான நிலையம் சென்று கொடுத்தேன். அவர்கள் "உடையும் பொருள்" என்ற வாசகத்தை அதில் ஒட்டி, சாதாரணமாக எடுத்து சென்று விட்டனர். இங்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், தொலைகாட்சியை விமானத்தில் எடுத்து கொண்டுவர தனியாக பணம் கொடுக்க தேவையில்லை. விமான நிலையத்தினர் தொலைகாட்சியை கூட சாதாரண பெட்டி போல் கருதி, எடுத்து கொள்கின்றனர். ஆனால் விமானத்தில் எத்தனை பெட்டிகளை எடுத்து செல்வது என்பதற்கு ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறை இதற்கும் அடங்கும்.
அமெரிக்காவில் நடந்ததை விட சென்னையில் தான்... தொடரும்