Saturday, March 28, 2009

என்னவென்று சொல்ல

சென்றவார சனிக்கிழமை, வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறோம் என்று நினைத்து எனது பழைய அலுவக நண்பர்களை பார்க்க வடபழனிக்கு சென்றேன். நான் சென்ற நேரம் மதிய வேளை என்பதால் என் நண்பர் உடன் சாப்பிட வசந்தபவன் உணவுவிடுதிக்கு சென்றோம். நான் அந்த பழைய அலுவகத்தில் வேலை சேரும் போது ஒரு அளவு சாப்பாட்டின் விலை ரூ. 24. உணவு சொல்லும்படி இல்லை என்றாலும், வேறு வழி இல்லாமல் உண்ண வேண்டிய சூழ்நிலை. இரண்டு வருடத்தில் ரூ.10 வரை கூடியது. ஆனால் அன்று உணவுக்கான விலையைக் கேட்டால் ரூ.45 என்று அவர்கள் சென்ன போது சாப்பாடு சாப்பிடும் மனம் போய் விட்டது. இதற்க்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், 18 முதல் 20 ரூபாய்க்கு விற்ற கிலோ அரிசி இன்று 40 ரூபாயை நெருங்கிக்கொண்டிருக்கிறது. காரணத்தைப் பார்த்தால் பணவீக்கம்.

சென்ற வார மத்திய அரசாங்கத்தின் ஆய்வுப்படி பணவீக்கம் 0.44 தான். இது வரை பணவீக்கம் 1க்கு கீழே சென்றது இல்லை என்று கேள்விப் பட்டு உள்ளேன். சுருக்கமா சொல்வதென்றால் இந்திய வரலாற்றிலேயே இன்றுவரை இல்லாத புள்ளி அளவு.

இத்தனைக்கும் உணவின் விலை ரூ.24 இருந்த போது பணவீக்கம் 3.xx அல்லது 4.xx. ஆனால் பணவீக்கம் 1க்கு கீழே இருந்தும் ஏன் இந்த அதிக விலை என்று புரியவில்லை.

இதை விட சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அரசால் நடத்தப்படும் உணவகத்தில் ஒரு (மட்டமான) தோசையின் விலை ரூ 6. ஆனால் இன்று அதே தோசையின் விலை ரூ 8. இந்த விலை ஏற்றத்திற்க்கான கரணம் தெரியவில்லை.

இந்த விலை ஏற்றத்தை குறைக்க மத்திய அரசு பல லட்சம் கோடிகளை வெளியில் விடுகிறது. இதை தவிர பாரத ரிசர்வ் வங்கி எடுத்த பல நடவடிக்கைகள் மூலம் பணவீக்கம் மறைந்து (புள்ளிகளின் அளவிலேயே) இன்று பணவாட்டத்தை நோக்கி போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அதாவது உற்பத்தி இருக்கும் அளவு தேவைப்பாடு இல்லாமல் இருக்கும் சூழ்நிலை. அவ்வாறு நடந்தால் அந்த பொருட்களின் விலை சரியும். ஆனால் நம்னாட்டிலோ பண முதலைகள் அனைவரும் உற்பத்தி குறைப்பு என்ற அஸ்திரத்தை கையில் எடுத்து எந்த ஒரு பொருட்களின் விலையும் குறையாமல் பார்த்து வருகின்றனர்.

தீவிரவாதிகளின் கொலை விளையாட்டு, வேலை இழப்பு, சம்பள குறைப்பு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அளவுக்கு அதிகமான இலவசங்கள் என்று சீரழிந்து வரும் நம் நாட்டில் அணு ஆயுத ஒப்பந்தம், 20க்கு 20 மட்டைப் பந்து விளையாட்டு என்று மிளிர்கிறது இந்தியா, எரிகிறது ஏழைகளின் வயிர்.

இத்தனைக்கும் நடுவே தேர்தல் வந்து விட்டது.... இன்றைய வார பணவீக்கம் 0.27 இந்நிலையில் மத்திய அரசு பணவீக்கம் நாங்கள் கட்டுப்படுத்தி விட்டோம் என்று கூறி ஏழை மக்களின் வயிறு எரிந்து கொண்டு இருக்கும் நேரத்தில் வாக்கு கேட்டு வருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் இந்தியா, அடுத்த ஆப்கன் ஆகும் நிலை வெகு தொலைவில் இல்லை...

திருப்பம்: சிறுகதை

"ஆசை தான் எல்லா துன்பத்திற்கு முதற்படி" என்று தெரிந்தும் எனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்ற ஆசை. என் நண்பர்களிடம் இதை கூறிய போது உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று வாங்கி கொண்டேன். இருந்தாலும் ஒரு கதையையாவது எழுத வேண்டும் என்று நினைத்து இதோ கீழே ஆரம்பிக்கின்றேன்.

பூ பூத்து குலுக்கும் சாலையில் கதையின் நாயகனும், நாயகியும் எதிர் எதிர் வீட்டில் குடிருக்கின்றனர். நாயகனுக்கு முதலில் அறிமுக பாடலுடன் கதை ஆரம்பமாகிறது. கதை எழுதும் நானும் சாதரண தமிழன் தான். அதனால் என் கதையில் கூட நாயகனுக்கும், நாயகிக்கும் கண்டதும் காதல். இரண்டு காதல் கீதங்களுடன், ஒரு சண்டை காட்சியும் முடியும் போது அவர்களுது காதல், நாயகனின் அப்பாக்கு தெரிய வருகிறது. இக்கதையில் அப்பா பாத்திரம் தான் வில்லன். இத்துடன் முதல்பகுதி முடிவுக்கு வருகிறது.

இரண்டாம் முதல்பகுதியில் மீண்டும் ஒரு காதல் கீதம், ஒரு சோக பாடல். கதை பல திருப்பங்களுடன் முடிவுக்கு வருகிறது.

அப்பா: அந்த பெண்ணை நீ திருமணம் செய்து கொள்வதை என்னால் அனுமதிக்க முடியாது.

நாயகன்: ஏன்? இருவரும் ஒரே ஜாதி. அவளுக்கும் நல்ல படிப்பு இருக்கிறது. பின் உங்களுக்கு என்ன பிரச்சினை.

கதையில் ஒரு திருப்பம்....

அப்பா: அவள் உனக்கு தங்கை முறை.

நாயகன் அழுது கொண்டே சுவரில் சாய்ந்தவாறு உட்காரும் போது

கதையில் மீண்டும் ஒரு திருப்பம்...

நாயகனின் அம்மா: இல்லை... அப்பெண் உனக்கு தான்.

அதிர்ச்சியுடன், கோபத்துடன் அப்பா இருக்கும் வேளையில் நாயகனின் அம்மா: இவர் உனக்கு உண்மையான அப்பா இல்லை.

இப்போது நாயகன் மகிழ்ச்சியுடன் திருமண கனவில்..

சுபம்...

என்று நீங்கள் நினைத்தால் அது தவறு... மீண்டும் ஒரு திருப்பத்துடன் கதை தொடர்கிறது.

நாயகனின் அம்மா: உன் திருமண தேதி உனது ஏழாம் வகுப்பு முடியும் போதும், அவளுக்கு ஐந்தாம் வகுப்பு முடியும் போதும் தான் முடிவு செய்யப்படும் என்று கூறும் போது.. நாயகனின் நண்பன் கோலி குண்டுடன் வெளியில் விளையாடுவதற்கு...

முடியலேப்பா! :)

குறிப்பு: இக்கதை என் கைதொலைபேசியில் குறுன்சொல்லக வந்தது. நான் இக்கதையை எழுது முடிக்கையில் மயங்கி விழபோனேன். ஆனால் படிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் நிலைமையை நினைத்தால்....

Friday, March 20, 2009

வந்தார்கள் வென்றார்கள்

நமது நாட்டில் இப்போது உள்ள அரசியல், வாழ்க்கை, தீவிரவாதம், போர் முறைகள் ஆகியவற்றை பார்த்து சிலசமயம் வியப்படைகிறோம் மற்றும் பல நேரத்தில் வெறுப்பு அடைகிறோம். நாம் வாழுகின்ற வாழ்க்கை முறை, பண்பாடு, கலைநயம், ஆன்மிகம் ஆகியவை நான் தெரிந்து கொண்டு இருந்தாலும், பழைய மாமன்னர்கள் திரைக்காவியத்தை பார்க்கும் போது முன்னோர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடியும்.

வருங்கால மன்னர்கள் என்று அழைக்கப்படும் இளைய சமுதாயம் மேற்கிந்திய நாடுகளின் வாழ்க்கை முறையை எடுத்து அதில் முழ்கி கொண்டு இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் முன்னோர்கள் அப்படி என்ன தான் சொல்லி இருக்கின்றனர் என்பதை பார்க்கவும், நான் ரசித்த கண்ணதாசன் வரிகளின் ( "முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம், முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்") படியும் ஆராய தொடங்கிய காலம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாமன்னர்கள் காலம். ஆரம்பிக்கும் போதே ஏன் இந்த வேண்டாத வேலை என்ற வசவு சொல் பல பேரிடம் இருந்து பெற்று கொண்டேன்.

சில எழுத்தாளர்களின் படைப்புகளை பார்க்கும் போது மாமன்னர்களின் ஆண்ட ஆண்டு பற்றியும், அதற்கு மேல் அவர்கள் செய்த நல் காரியங்கள் பற்றியும் தான் இருந்தன. கடைசியா நண்பர்கள் வாயிலாக "வந்தார்கள் வென்றார்கள்" என்ற புத்தகத்தை அறிந்து ஆராய தொடங்கினேன். நான் தேடிய அனைத்து விஷயங்களும் அதில் விரிவாக தெளிவாக கூறப்பட்டு உள்ளன. இப்புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் திரு. மதன் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். கி.பி. 1398 முதல் கி.பி.1858 வரை இந்த இடைப்பட்ட காலத்தில் இருந்த தைமூர் முதல் மொகலாய கடைசி சக்கரவர்த்தி ஆன பகதூர்ஷா வரை அலசி ஆராய்ந்து ஆச்சிரியத்து, பிரமித்து போனேன். பேரரசர்கள் ஆட்சியின் போது போருக்காக கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள், கலைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், புரட்சிகளை அடக்கிய விதம், சட்டத்திட்டங்கள் என பார்க்கும் போது மலைக்க வைக்கிறது. இந்தியா மண்ணில் பிறப்பு இல்லா மன்னர்கள் ஆண்டு இருந்தாலும், அவர்கள் ஆட்சி செய்த விதம், மலர்ந்த முகத்துடன் சாதாரண சாப்பாட்டை எப்படி விருந்தாக மாற்றுகிறதோ அது போல, ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்றியது.

ஆனால் தற்போது நடை பெறுகின்ற அரசியலை பார்த்தால் நான் என்னவென்று சொல்ல.

நேரம் இருந்தால் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

யாவரும் நலம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதையே இல்லாமல் ஆவிகளுடன் மிரட்டிய படம். வெளிநாடுகளில் 13 என்ற எண் ராசி இல்லாததால் இத்திரைப்படத்தில் எங்கு பார்த்தாலும் 13 மாயம். இதே திரைப்படம் ஹிந்தி மொழியில் 13பி என்ற பெயரில் வெளிவந்து உள்ளது.வழக்கமாக வெளிநாடு திரைப்படங்கள் தான் தமிழில் வெளிவரும், ஆனால் முதலில் தமிழில் ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படத்தை அங்கு உள்ள இயக்குனர்கள் பார்த்து, ஆங்கிலத்தில் எடுக்க உள்ளனர் என்பது இதன் சிறப்பு.

மாதவன் - உலகநாயகன் கமல்ஹாசன் உடன் நடித்த அன்பே சிவத்திற்கு பிறகு சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்.

என்னதான் ஆவிகளின் படமாக இருந்தாலும் சில சமயம், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கெடுத்து விழுக்கின்ற இயக்குனர்கள் மத்தியில் வெறும் சாதாரண சின்னதிரை தொடரை பயன்படுத்தி திரைப்படம் முடியும் வரை நாற்காலியின் நுனியில் உட்காரவைத்தது தான் இவருக்கு வெற்றி.

ஒலி மற்றும் ஒளி - இல்லையேல் இத்திரைப்படம் இல்லை. இத்திரைப்படத்தை தொலைக்காட்சிலே, கணிப்பொறியிலே பார்த்தல் ஒன்றும் இல்லை. ஒலி மற்றும் ஒளி நன்றாக உள்ள திரைஅரங்கில் பார்த்தல் மட்டுமே பார்த்த மாதரி இருக்கும் என்பது என் கருத்து.

திருநீர்மலை

திருச்சிராபள்ளி மாநகரில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை பார்க்க சென்ற போது ஒரே இருட்டில், தூரத்தில் இருந்து கண்டதால் தரிசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் திருநீர்மலைக்கு சென்ற போது தீர்ந்தது. தமிழகத்தில் எனக்கு தெரிந்த வரை அனந்த சயனத்துடன் இருக்கும் இரண்டாவது பெரிய ரங்கநாதரை அதுவும் மிகஅருகில் தரிசிக்கும் போது ஏதோ ஒரு மனநிம்மதி.

நேரம் இருந்தால் நீங்களும் சென்று வாருங்கள்

Saturday, March 07, 2009

வேலி தோட்டத்தை மேய்கிறது

சுகந்திரமாக தன் கருத்தை வெளியும் உரிமையை கூட இச்சட்டம் மறுக்கிறது என்று என்னும் போது, நாம் இந்திய திருநாட்டில் தான் இருக்கிறோமா என்று ஐயம் எனக்கு ஏற்ப்பட்டு இருக்கிறது.

http://ibnlive.in.com/news/making-nasty-comments-online-can-land-you-in-jail/86799-11.html

அபியும் நானும்

இவ்வாழ்வில் உள்ள உறவுகள் நிரந்தரம் இல்லை. அந்த உறவுகள் தந்த நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்

உறவுகளை உயிராக எடுத்து கொள்ளும் மனம், அந்த உறவுகள் பிரியும் போது மட்டும் பக்குவப்பட்ட மனது தேவைப்படுகிறது.

மனதளவில் ஒரு புன்னைகை/ ஒரு கணம் கொடுத்த இயக்குனர் திரு. ராதா மோகனுக்கும், நடிகர்/தயாரிப்பாளர் திரு. பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் மனம் திறந்த பாராட்டு.

செளக்கார்பேட்

வடசென்னை மக்களின் மாபெரும் சந்தை. நான் சைதையில் இருந்து அவ்விடத்திற்கு போய் சேரவே சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில் நடந்தவைகளை பார்த்தல் தி.நகர் வியாபரத்திற்கு மேல் கண்டிப்பாக நடக்கும் என தெரிந்தது. நான் ஆச்சரியப்பட்ட விஷயம் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த கை ரிக்சா, மனிதன் இழுக்கும் மூட்டை வண்டி (மதுரையில் கூட இந்த வண்டி இல்லை). இது போல் பல சந்தைகள் உள்ளது என அறிந்து நான் வியந்தேன்.

குறிப்பு: நான் சென்னையில் பல இடங்களுக்கு சென்று உள்ளேன். ஆனால் சத்யம் சினிமாவில் வர கூடிய பெண்கள் எங்கு இருந்து வருகின்றனர் என்ற சந்தேகம் செளக்கார்பேட்டில் தீர்ந்தது :)