Thursday, November 27, 2008
என்ன கொடுமை ஐயா இது
Wednesday, November 26, 2008
சென்னையில் ஒரு (புயல்) மழை காலம்:
நான் சென்னையில் இப்படி ஒரு மழையை பார்த்திருந்தாலும், இம்மழையில் ஆறாக முட்டி அளவு ஓடும் தண்ணிரில் அலுவகத்திற்கு செல்வது இதுவே முதல் முறை. நேற்று மாலை 5 மணி முதல் இரவு முழுவதும் இடைவிடாது மழை பெய்தும், இன்றும் மழை தொடர்ந்து தமிழ்நாட்டை முழுவதும் வெள்ள காடாக மாற்றி கொண்டு இருக்கிறது. இப்படிபட்ட புயல் மழையிலும் ஒரு சின்ன சந்தோசம். அதிகாலையில் புயல் மழை பெய்யும் போது, தேனிர் கடையில் சாரல் படும் இடத்தில் இருந்து கொண்டு சூடான தேனிர் சாப்பிடும் இன்பம் வெகு நாளைக்கு பிறகு இன்று கிடைத்து. இம்மழையில் அலுவகத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டுமா என்ற எண்ணம் வரும் போது, மழையை ரசிக்காமல் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணி எனது பறக்கும் வாகனத்தை எடுத்து மெதுவாக இயற்கையின் அழகை ரசித்து கொண்டே அலுவகத்தை அடைந்தேன். பள்ளி பருவத்தில் மாலை நேர வகுப்புக்கு செல்லும் போது அல்லது மாலை நேர வகுப்பை விட்டு வீடு திருப்பும் போது மழையில் நனைந்த அனுபவம் போல் இன்றைய பொழுது இருந்தது. நான் என்னுடைய பள்ளி பருவத்தை நினைத்து பார்க்கவே இம்மழை வந்து தமிழ்நாட்டையே வெள்ள காடாக்க வேண்டுமா என்ற வருத்தம் வந்து விட்டது.
Monday, November 24, 2008
சிதம்பரத்தில் ஒரு அப்பச்சாமி
* சம்சராம் அது மின்சாரம்,
* குடும்பம் ஒரு கதம்பம்,
* ஆவதும் பெண்லே அழிவதும் பெண்லே,
* மணல் கயிறு
போன்ற படங்களுக்கு பிறகு, நான் ரசித்து பார்த்த திரைப்படம்.
ஒரு குடும்ப தலைவன் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு ஓடி மீண்டும் மனம் திருந்தி குடும்பத்தில் இணையும் கதை. திரைக்கதையை அமைத்த விதம் ஆற்றில் ஓடும் தெளிவான நீர் போல இருந்தது இதன் சிறப்பு. கதையின் நாயகி ஆன நவ்யா நாயர் இன்றி இத்திரைபடம் இல்லை. அவ்வளவு அற்புதமான நடிப்பு. திருமணம் செய்து கொள்ள போகின்ற அனைவரும் பார்க்க வேண்டிய குடும்ப காவியம்.
திரு. தங்கர் பச்சன் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்
Saturday, November 22, 2008
அடிப்படை கல்வி
நான் சைதாப்பேட்டையில் தனியாக ஒரு வசந்தமாளிகையை வாடகைக்கு எடுத்து குடிபோன போது ஏற்பட்ட அனுபங்கள் பல. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க தாயரித்த பட்டியல் கண்டு அதிர்ந்து போனேன். இதனை விட பெரியகொடுமை என்றென்றால் மின்சாதன பொருட்களை சரியாக மாட்டிவிடுவது. எனது தந்தை மின்சாரவாரியா ஊழியர் என்பதால், வீட்டிற்கு தேவையானவற்றை அவரது நண்பர்கள் பார்த்து கொள்வார்கள். இதனால் எனக்கு மின்சாதன பொருட்களை பற்றி தெரியாமல் போய்விட்டது. அதனால் இன்று வசந்தமாளிகையில் குடிபெயர்ந்த போது நான் பட்ட கஷ்டங்கள் வெளியில் சொல்லமுடியாது. இதில் நான் ஒரு கணிப்பொறி மென்பொருள் வல்லுநர் வேறு, மின்விசிறி கூட மாட்ட தெரியவில்லை.
இதை விளையாட்டு தனமாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு காரணமாக நான் கருதுவது, அடிப்படை கல்வி பயன்றவிதம். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, துளிஅளவு கூட தொழில் முறையான கல்விஅறிவு இல்லை என்பது எனது வாதம். 12ம் வகுப்பு படித்த மாணவனுக்கு/மாணவிக்கு, இச்சமூகம் ஒரு அங்கீகராம் அளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஒரு மிதிவண்டி வாகனம் பழுது அடைந்தால் என்ன பழுது என்று கூட அவர்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை மற்றும் மின்விசிறி கூட மாட்ட தெரியவில்லை. இப்படி வாழ்க்கைக்கு தேவையான சிறுசிறு விஷயங்களுக்கு கூட அடுத்தவரின் உதவியை நாட உள்ளது. இதை நினைத்து இச்சமூகம் வெட்கபட வேண்டும். நமது கல்வி முறை வாழ்க்கை நடைமுறையை பின்பற்ற வேண்டும். நமது நாடு இன்னும் வேகமாக வளர இது வழிவகுக்கும்.
வாழ்க வளமுடன்
Friday, November 21, 2008
ஸ்ரீகுமார்
சென்ற வருடம், இதே நேரத்தில் என்னுடன் சேர்த்து 5 பேர் சபரிமலை சென்றோம். அதில் என்னுடைய கல்லூரி நண்பன் அஸ்வினின் நண்பர் ஸ்ரீகுமாரும் ஒருவர் (எல்லோருக்கும் ஓரே வயது தான்). சபரிமலை பயணம் ஒரு நாள் என்றாலும், அந்நாளை என்னால் மறக்க முடியாது. இம்மாதத்தில் நான் பெங்களூரு போன போது, அவருக்கு 4 மாதத்திற்கு முன்னால் திருமணம் ஆனதையும், பெங்களூரில் வசிப்பதாகவும் அறிந்தேன். ஆனால் இன்று காலை அவர் அலுவகத்திற்கு வாகனத்தில் செல்லும் போது கனரக வாகனத்தின் மீது மோதி, காலமானர் என்பதை அஸ்வின் என்னிடம் சொன்ன போது, எனது இதயம் கனத்து விட்டது. அந்த ஆத்மா சாந்தி அடைய இறைவனை நான் வேண்டி கொள்கிறேன். அவரது குடும்பத்தும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.
எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
இறந்த நாளை நினைக்கமால்,
பிறக்கின்ற நாளை நினைக்கமால்,
இன்றைய நாளுக்காக வாழுங்கள்.