Wednesday, October 29, 2008
நல்ல கேள்வி
உதாரணமாக தமிழ் மொழியை வளர்த்தில் மதுரை மாநகருக்கு முக்கிய பங்கு உண்டு. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னருக்கு பிறகு திருமலை நாயக்க மன்னர்கள் ஆண்டு வந்தனர் என்பது வரலாறு. திருமலை நாயக்க மன்னர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் தமிழர்கள் அல்ல. பின்பு யார் தமிழன்?
இன்று ஈழ தமிழர்களுக்காக என்று நாம் பொருள், உடை,உணவு என்று ஆகியவற்றை இப்போது தருகிறோம். நான் இவற்றை தருவது தவறு என்று கூறவில்லை. ஆனால் அவர்கள் தமிழர்களா?
Monday, October 27, 2008
எப்போது மாறும்
இடம்: சென்னை
நேரம்: மதியம் 2:45 மணி முதல் மாலை 7:00 மணி வரை
இந்நேரத்தில்,
* ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு முதல்வர் தலைமையில் மனித சங்கிலி
* வடகிழக்கு பருவமழை
* சென்னை மக்கள்: தீபாவளி வியாபாரம்
இக்காரணங்களால் சென்னை கிட்டதட்ட 5 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஸ்தம்பித்தது. இத்தேதி வெள்ளிகிழமை ஆனதால், தீபாவளிக்காக வெளியூர் செல்ல வேண்டிய பலாயிரம் மக்கள் அவதிப்பட்டதையும், வாகனங்களை ஓட்டி வந்த பெண்கள் பட்ட கஷ்டங்களையும், பேருந்தில் இருந்த பயணிகள் 6 முதல் 8 கி.மீ வரை நடந்து சென்ற கொடுமையும், மருத்துவமனை வாகனம் 30 நிமிடம் வெளியேற முடியாமல் சிக்ககொண்டதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதிலும் ஒரு 4 சக்கர சொகுசு வாகனத்தில் ஒருவர் மடிக்கணினியுடன் வலைதளத்தில் இருந்ததையும் பார்க்க முடிந்தது. முதல்வன் திரைப்படத்தில் நாம் பார்த்த திரைக்காட்சிகளை இங்கு நேரில் பார்த்த போது எனது இதயத்தில் இருந்து ரத்தம் வடிந்தது. இதற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது, மனித சங்கிலி போரட்டம் தான்.
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்பட்ட போரட்டத்தால், தமிழக மக்கள் அடைந்த துன்பத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது. இதில் மனித சங்கிலி போரட்டம் வெற்றி என்ற பெருமை வேற இதற்கு. நான் எனது அலுவகத்தில் இருந்து வெளியில் நடந்து கொண்டிருப்பத்தை தெரியால் மாலை 5 மணிக்கு வீட்டிற்கு செல்ல தொடங்கும் போது... பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல. 11 கி.மீ தூரம் 2 மணி நேரத்தில் கடந்து(அண்ணா பல்கலைக்கழத்தின் நடைபாதையில் வண்டியை ஏற்றி, 2 முறை 4 சக்கர வாகனத்தை இடித்துவிட்டு, வாசவு சொற்களை கேட்டு கொண்டு), கடைசியாக எனது தொடர்வண்டியை அடைந்தேன். இதே போல் என்னுடன் வந்த நண்பர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் அல்ல. பல மக்கள் தொடர்வண்டியை பிடிக்க முடியாமல் விட்டுவிட்டனர் (அதில் என் நண்பனும் ஒருவன்). அரசாங்கம் இது போன்ற போராட்டங்களை அறிவிக்கப்போவதற்கு முன்னால் நடைமுறை சிக்கலை ஆராய வேண்டும். இல்லையென்றால் இக்கஷ்டம் நமக்கு தொடரும்.
Saturday, October 25, 2008
மாற்றங்கள்: 1
நான் பணிபுரியும் 3ம் இடத்தில், தனிமையை உணர்கிறேன். இந்த மாற்றம் நான் எதிர்பார்த்து தான். இருந்தாலும் ஏதே ஒரு சிறிய ஏக்கம் என் ஆழ் மனதில் வருத்தி கொண்டு இருக்கிறது.
Thursday, October 02, 2008
தசரா
குலசை: மைசூருக்கு அடுத்தப்படியாக் தசராவிழாக்கு புகழ்பெற்ற ஊர் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேசரன்பட்டிணம் ஆகும். இங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொஞ்சம் வித்தியாசமானது. வேண்டுதல் செலுத்தும் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் இங்கு வருவது தான் சிறப்பு.
இந்தியாவின் பிரமாண்டான முறையில் நடைபெறும் விழாக்களில் ஒன்றான இந்த தசரா விழா ந்ம் பண்பாடு, கலாச்சாரத்தை வளர்ப்பதோடு, உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றவும் செய்கிறது.
பூர்ணம் விஸ்வநாதன்
சொர்க்கத்தில் இடம்
சினிமா என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையை பலநேரத்தில் பிரதிப்பலிக்கிறது. எடுத்துக்காட்டாக, மெட்ராஸ் 2 பாண்டிச்சேரி, 12பி மற்றும் பார்த்தேன் ரசித்தேன் போன்ற திரைபடங்களில் பேருத்தின் முக்கியத்துவத்தை காட்டப்படுகிறது (இந்த 3 திரைபடங்களும் சென்னை பேருத்தினை மையப்படுத்தியது). அன்றைய காலகட்டத்தில் பேருந்துப் பயணம் என்பது இன்பமாக இருந்தது. காரணம் பேருந்தில் பயணம் செய்வேர் எண்ணிக்கை குறைவு மற்றும் ஒட்டுனர், நடத்துனரின் பண்பு மதிக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் இன்றைய கால்கட்டத்தில் அதுவும் குறிப்பாக சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால், பேருந்துப் பயணம் என்பது நரகத்திற்கு சென்று வந்து உள்ளதாகவே கருதபடுகிறது. ஏன்! அவர்களுக்கு எமன் கூட சென்னை பேருந்துப் பயணித்தை கருத்தில் கொண்டு "சொர்க்கத்தில் இடம்" அளிக்க வாய்ப்புண்டு.
சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருந்தபோதிலும் ஒட்டுனர், நடத்துனரின் பண்பு மிகவும் கண்டிக்கதக்கதாக உள்ளது. ஆனால் மற்ற மாநிலத்தை எடுத்துக்கொண்டால், இந்த அளவு மோசமானதாக இருப்பதில்லை. ஏன்? தமிழ்நாட்டிலேயே மற்ற மாநகரத்தை எடுத்து கொண்டால் (மதுரை, திருச்சி, சேலம், கோவை, நெல்லை) இந்த அளவு கேவலமாக் இருப்பதில்லை. மக்கள் செலுத்தும் வரிபணத்தை ஊதியமாக பெற்று கொள்ளும் அவர்கள், மக்களை சிறிதளவு கூட மதிப்பதில்லை. சொல்லபோனால் தீபாவளி ஊக்கத்தொகை முதலில் பெற்று கொள்ளுபவர்கள் அவர்களே. சென்னை போக்குவரத்துகழகம் நல்லமுறையில் இயங்க, ஒட்டுனர், நடத்துனரின் கையில் மட்டுமே உள்ளது. அவர்கள் அரசு ஊதியம் வாங்கும் வரை அவர்களை கட்டுபடுத்தவே முடியாது என்பது என் கருத்து. நல்ல முறையில் இத்துறையை இயக்க உங்களின் கருத்து?
Wednesday, October 01, 2008
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?
* தொடர்ந்து நடைபெற்று வரும் தீவரவாத செயல்கள்.
* ஒரிஸ்ஸாவில் போலீ்ஸ் கண் எதிரே கன்னியஸ்திரி பலாத்காரம்
* மத்திய பிரேசத்தில், வறுமை நிலைக் காரணமாக ஒரு கிராம மக்கள் அமைத்த சிறுநீரக விற்பனை மையம்
* மின்சார தட்டுப்பட்டால், தனக்கு பிறந்த குழந்தையை பார்க்க மெழுகு வர்த்தியுடன் வந்த தந்தைமார்கள்...
இப்படி இன்னும் பல,
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவின் படி, 2020ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ, கல்லறை தோட்டமாக மாறாமல் இருந்தால் மிகவும் சரி