Monday, September 29, 2008

அறுக்கப்பட்டு கொண்டுஇருக்கும் வேர்கள்

"தலைமுறையாய் தலைமுறையாய்" என்று வயதானவர்கள் கூறுவதை திரைப்படத்தில் பார்த்து இருக்கிறோம். ஏன்! சில சமயம் நமது வீட்டில் கூட கூறுவார்கள். ஆனால் இன்னும் சில காலத்திற்கு பிறகு இதை கேட்க முடியாத சூழ்நிலை இன்று காணபடுகிறது. இதை நினைத்து பல நண்பர்கள் வருத்தப்பட்டத்தை நான் காணமுடிந்தது. இதற்கு காரணம் என்ன?

காதல் திருமணம் என்ற பெயரில் தன்னுடைய சமூகத்தை விட்டுவிட்டு வேறு ஒரு சமூகத்தில் மணம் முடிப்பதால் என்பது தான். மரத்தின் வேர்கள் ஓவ்வொன்றாக பிடுங்க படுவதினால், மரத்தின் வளம் எப்படி பாதிக்க படுகிறதோ, கலப்பு திருமணம் என்ற பெயரில் "குடும்ப பாரம்பரியம்" என்ற வேர்கள் அறுக்கபடுகின்றன. இந்நிலை தொடர்ந்தால் குடும்ப பாரம்பரியம் என்ற தலைமுறை இல்லாமல் போய்விடும்.

உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், இயக்குனர் மற்றும் நடிகர் திரு. கே. பாக்யாராஜ் அவர்களின் வெற்றி படமான "இது நம்ம ஆளு" திரைபடத்தில் அவர் கூறும் கருத்து, "மனிதன் தான் முக்கியம், சமூகம் தேவை இல்லை". எல்லோரும் ஏற்று கொண்ட கருத்து. நானும் தான். இதில் சொல்லபடாத/அறியபடாத உண்மை ஒன்று உள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகி செய்துக் கொண்ட கலப்பு கிருமணத்தினால் கதாநாயகியின் குடும்ப பாரம்பரியம் மற்றும் வம்சவழி என்ற வேர் அங்கு அறுக்கபடுகிறது. இதேநிலை தொடர்ந்தால் அச்சமூகத்தின் நிலை என்ன மற்றும் இதற்கு முடிவு தான் என்ன?

மரவளம் இல்லையென்றால் நாடு செழிக்காது,
குடும்ப பாரம்பரியம் இல்லையென்றால் சமூகம் செழிக்காது,
சமூகவளம் இல்லையென்றால் சமுதாயம் செழிக்காது


எண்ணும்: சிவா (தொழில் நுட்பக்கல்லூரி நண்பர்), நிர்மல்.
எழுத்தும்: நிர்மல்

Friday, September 26, 2008

பிச்சைக்காரன்

நாட்டில் பிச்சைக்காரர்கள் உருவாக அரசாங்கமும் முக்கிய பங்கு வகுக்கிறது. பிச்சைக்காரன் என்பவன் பணத்தை தானமாக பெற்று கொள்பவன் அல்லது பணத்தை மிரட்டி பெற்று கொள்பவன். உதாரணமாக, நாம் வசிக்கும் சென்னை மாநகரில் சாலையின் அருகே பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனை விட வாகனத்தை மறித்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் அதிகம். கேட்டால் தலைகவசம் இல்லை என்பது.

நமது நாட்டு சட்டத்தில் வாகனத்தை ஓட்டும் போது உயிரை காப்பற்றி கொள்ள தலைகவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது என்று அறிவோம். தலைகவசம் அணியாமல் சென்றால் ரூ. 100 அபராதம். இந்த சட்டத்தை இயற்றியது யார் என்றால், 4 சக்கர வாகனத்தை ஓட்டுவோர். 2 சக்கர வாகனத்தை ஓட்டுவோரின், இன்னல்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும். எடுத்துக்காட்டாக, 2 சக்கர வாகனத்தை பயன்படுத்தி தொழில் செய்பவர்கள், தினமும் 40 முதல் 60 கடை வரை ஏறி இருங்க வேண்டும், இவர்கள் தலைகவசம் அணிய முடியுமா? இதே போல் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இந்த நிலையில் (சில) போக்குவரத்து துறை அதிகாரி, 2 சக்கர வாகனத்தை ஓட்டுபவரை ஓடி போய் பிடித்து, அவர்கள் உழைத்து பார்த்த சிறிய லாபத்தில் கேவலமாக ரூ 20 முதல் ரூ. 50 பிடுங்கி கொள்வது. பொது மக்கள் எவ்வளவு சிரமபடுகிறார்கள் என்று யாருக்கும் தெரிவது இல்லை. இப்போது சென்னையில் 95% பேர் தலைகவசம் அணிகிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. ஆனால் தலைகவசம் அணிபவர்கள் கூறுவது சட்டத்தால் பயந்து இல்லை, பிச்சைக்காரர்கள் இடம் இருந்து தன் உழைத்தை காப்பற்றி கொள்ள.

தலைகவசம் என்பது அவர் அவர்களின் விருப்பமாக இருக்க வேண்டும். கடுமையான சட்டத்தை இயற்றி உயிரை காப்பற்ற பாடுபடுகின்ற சட்டம், வாகனத்தை மறித்து பிச்சை எடுக்கும் (சில) போக்குவரத்து துறை அதிகாரித்திடம் இருத்து பொது மக்களை காப்பற்ற வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்களுக்கு முன்னால், போக்குவரத்து துறை அதிகாரியை பார்த்து மிகவும் வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று அவர்களை பார்க்கும் பொழுது மனித உயிரை/உழைப்பை குடிக்கும் எமனை போல அல்லவா தெரிகிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களிடம் இருந்து ஒரு விடிவுகாலம் பிறக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கும் ஆயிரத்தில் ஒருவன்.

Thursday, September 25, 2008

முதல் வேலை

இப்பூவுலகில் வாழ்வதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க எல்லோருக்கும் வேலை தேவைபடுகிறது. அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு இல்லை. என் பொறியியல் கல்லூரி முடிவதற்குள், எதிர்பராவிதமாக எனக்கு வேலை கிடைத்தது. செல்கின்ற அளவு ஊதியம் இல்லை என்றாலும், வீட்டில் இருந்து பணம் வாங்காமல், சென்னையில் வாழ உதவி செய்தது. எனவே எப்படி இருந்தாலும், அந்த வேலை எனக்கு தெய்வம் போன்றது. இதில் நான் பெருமை பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. எனது வகுப்புறையில், முதல் முதலாக பணியில் சேர்த்தது நான் தான். அதோடு இல்லாமல் சமுதாயத்தில், மதிப்பை பெற்று கொடுத்தது.